Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மாஸ்டர் பட ‘’வாத்தி கம்மிங் வீடியோ புரோமோ’’ ரிலீஸ் !

மாஸ்டர் பட ‘’வாத்தி கம்மிங் வீடியோ புரோமோ’’ ரிலீஸ் !
, செவ்வாய், 5 ஜனவரி 2021 (20:14 IST)
விஜய்யின் மாஸ்டர் படத்தின் இடம்பெற்றுள்ள வாத்தி கம்மிங் பாடல் தற்போது 100 மில்லியன் பார்வையாளர்களைப் பெற்றுள்ளது. அதேசமயம் இப்பாடலின் வீடியோ பிரமோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இதுகுறித்து விஜய் ரசிகர்கள் டுவிட்டரில் ஹேஸ்டேக் உருவாக்கி டிரெண்டிங் செய்து வருகின்றனர்.

விஜய் ,சேதுபதி, நடிப்பில் உருவாகியுள்ள படம் மாஸ்டர். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார். அனிருத் இசையமைத்துள்ளார்.லோகேஷ் கனகராஜ் இப்படத்தை இயக்கியுள்ளார்.

வரும் ஜனவரி 13 ஆம் தேதி இப்படத்தை தியேட்டரில் வெளியிடுவதாகப் படக்குழு தெரிவித்த நிலையில் நடிகர் விஜய் சமீபத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து, தியேட்டர்களில் 100 சதவீதம் பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கவேண்டுமென கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்நிலையில் இன்று தமிழக அரசு திரையரங்கில் 100% பார்வையாளர்களுக்கு அனுமதியளித்து உத்தரவிட்டுள்ளது. இதனால் ஒட்டுமொத்த சினிமா துறையினரும், ரசிகர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
 


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கோவா தீவில் என்ஜாய் பண்ணும் சாக்ஷி அகர்வால் - ரீசென்ட் போட்டோஸ்!