Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் எதிர்மறைக் கதாபாத்திரத்தில் அஜித்… ஹெச் வினோத் கதை அப்டேட்!

Webdunia
வியாழன், 18 நவம்பர் 2021 (11:09 IST)
நடிகர் அஜித் சில ஆண்டுகளுக்கு முன்னர் மங்காத்தா உள்ளிட்ட படங்களில் எதிர்மறைக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்.

இந்த ஆண்டில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம் அஜித்குமார் நடிப்பில் உருவாகி வரும் வலிமை. இப்படத்தை ஹெச்.வினோத் இயக்கி வருகிறார். இப்படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கிறார். இந்த படத்தின் ரிலீஸ் மற்றும் இறுதிக்கட்ட வேலைகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்த படம் 2022 ஆம் ஆண்டு பொங்கலை முன்னிட்டு வெளியாக உள்ளது.

இதையடுத்து அஜித்தின் அடுத்த படத்தையும் ஹெச் வினோத்தே இயக்கவும், போனி கபூர் தயாரிக்கவும் உள்ளார். இந்த படத்தின் அனைத்து முன் தயாரிப்பு வேலைகளும் முடிந்துள்ள நிலையில் விரைவில் படப்பிடிப்பு தொடங்கப்படலாம் என சொல்லப்படுகிறது. இந்த படத்தில் அஜித் முழுக்க முழுக்க எதிர்மறைக் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளாராம். முன்பு மங்காத்தா போன்ற படங்களில் அவரின் எதிர்மறைக் கதாபாத்திரங்கள் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் லுக் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஜான்வி கபூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சுதா கொங்கரா & துருவ் விக்ரம் படத்தை தயாரிப்பது யார்? வெளியான தகவல்!

ரி ரிலீஸ் பட்டியலில் இணைந்த சூர்யா & தனுஷின் சூப்பர்ஹிட் படங்கள்!

நயன்தாராவின் மலையாள பட பூஜை புகைப்படங்கள்… இணையத்தில் வைரல்!

அடுத்த கட்டுரையில்
Show comments