கொரோனா பாதிப்புகள் குறைந்து வரும் நிலையில் தமிழகத்தில் 9வது மெகா தடுப்பூசி முகாம் இன்று நடைபெறுகிறது
தமிழகத்தில் முன்னதாக கொரோனா பாதிப்புகள் அதிகமாக இருந்த நிலையில் மெகா தடுப்பூசி முகாம்கள் மூலமாக வேகமாக தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இதுவரை தமிழகத்தில் 73 சதவீதத்தினர் முதல் தவணை தடுப்பூசியும், 35 சதவீதத்தினர் 2-ம் தவணை தடுப்பூசியையும் செலுத்திக் கொண்டுள்ளனர்.
இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில் இரண்டாவது டோஸ் போடுபவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. இன்று நடைபெறும் மெகா தடுப்பூசி முகாம் தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் முகாம்களில் நடைபெறுகிறது. சென்னையில் மட்டும் 2 ஆயிரம் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் தடுப்பூசி செலுத்துவதை அதிகரிக்க இனி வாரத்தில் வியாழன், ஞாயிறு இரண்டு நாட்கள் மெகா முகாம் நடத்தப்படும் என கூறப்பட்டுள்ளது.