Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தீபாவளி, பொங்கலுக்கு விருந்து படைக்கும் நயன்தாரா

தீபாவளி, பொங்கலுக்கு விருந்து படைக்கும் நயன்தாரா
, செவ்வாய், 26 செப்டம்பர் 2017 (17:30 IST)
தீபாவளி மற்றும் பொங்கல் விடுமுறையில் நயன்தாரா நடித்த படங்கள் ரிலீஸாகலாம் என்கிறார்கள்.



 
கோபி நைனார் இயக்கத்தில் நயன்தாரா நடித்துள்ள படம் ‘அறம்’. கலெக்டராக நயன் நடித்திருக்கும் இந்தப் படம், கிட்டத்தட்ட விஜய் நடிப்பில் ரிலீஸான ‘கத்தி’ பாணியில் அமைந்திருக்கும். இந்தப் படத்தை, நயன்தாராவே தன்னுடைய மேனேஜர் மூலம் தயாரித்துள்ளார். இந்தப் படம், தீபாவளிக்கு ரிலீஸாகலாம் என்கிறார்கள்.

‘டிமான்டி காலனி’ படத்தை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நயன் நடித்துள்ள படம் ‘இமைக்கா நொடிகள்’. விஜய் சேதுபதி நயன்தாராவின் கணவனாக நடித்துள்ள இந்தப் படத்தில், அதர்வா – ராஷி கண்ணா இருவரும் இன்னொரு ஜோடியாக நடித்துள்ளனர். பாலிவுட் நடிகர் அனுராக் கஷ்யப் நடித்துள்ள இந்தப் படம், பொங்கலுக்கு ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், சிவகார்த்திகேயன் ஜோடியாக நயன் நடித்துள்ள ‘வேலைக்காரன்’, டிசம்பர் 22ஆம் தேதி ரிலீஸாகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

‘அவதார்’ படத்தின் பட்ஜெட் எவ்வளவுனு தெரியுமா?