சிவகார்த்திகேயனின் டான் திரைப்படம் வெற்றிப்படமாக அமைந்த நிலையில் தற்போது நெட்பிளிக்ஸில் வெளியாகியுள்ளது.
 
									
			
			 
 			
 
 			
			                     
							
							
			        							
								
																	சிவகார்த்திகேயனின் எஸ்கே ப்ரொடக்ஷன்ஸும் லைகா நிறுவனமும் இணைந்து ஒரு தயாரித்த டான் திரைப்படம் கடந்த மே 13 ஆம் தேதி ரிலீஸ் ஆகி மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்துள்ளது. 100 கோடி ரூபாயை திரையரங்குகள் மூலமாக மட்டும் உலகம் முழுவதும் வசூல் செய்துள்ளது. இதையடுத்து படத்தின் 25 ஆவது நாள் வெற்றி விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. அதில் சிவகார்த்திகேயன் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டனர்.
 
									
										
			        							
								
																	இந்நிலையில் ரிலீஸாகி 28 ஆவது நாளான கடந்த ஜூன் 10 ஆம் தேதி டான் திரைப்படம் பிரபல ஓடிடி தளமான நெட்பிளிக்ஸில் ஸ்ட்ரீம் ஆனது. திரையரங்குகளில் படத்தைப் பார்க்காதவர்கள் தற்போது நெட்பிளிக்ஸில் பார்த்து கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர். இந்நிலையில் இந்த வார இந்திய படங்களின் டாப் 10 லிஸ்ட்டில் டான் முதலிடத்தில் உள்ளதாக நெட்பிளிக்ஸ் அறிவித்துள்ளது.