Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆஸ்திரேலியாவில் விக்ரம் வசூல் இவ்வளவா? வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Kamal vikram Australia box office collection
Webdunia
சனி, 18 ஜூன் 2022 (09:44 IST)
விக்ரம் திரைப்படம் இந்தியா மட்டுமில்லாமல் வெளிநாடுகளிலும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டு இருக்கிறது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள படம் விக்ரம். இந்த படத்தின் விஜய் சேதுபதி, பகத் பாசில் உள்ளிட்ட பலர் நடித்துள்ள நிலையில் அனிருத் இசையமைத்துள்ளார்.  இந்த படம் கடந்த 13 ஆம் தேதி ரிலீஸாகி பிளாக்பஸ்டர் ஹிட்டாகி வருகிறது. இதுவரை 250 கோடி ரூபாய்க்கு மேல் சம்பாதித்துள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. திரையரங்குகள் மூலமாக கிட்டத்தட்ட 300 கோடிக்கும் மேல் வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக இந்தியாவில் மட்டும் இல்லாமல் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் கூட வசூல் வேட்டை நிகழ்த்தி வருகிறது. வெளியாகி 3 வாரங்கள் சென்றுள்ள நிலையில் அமெரிக்காவில் 2.6 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் 21 கோடி) ரூபாய் வசூல் செய்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மூன்றாவது வாரத்தில் 60 திரைகளில் தொடர்ந்து ஓடிக்கொண்டு இருப்பதாகவும் விரைவில் 3 மில்லியன் டாலர்கள் வசூலிக்கும் எனவும் சொல்லப்படுகிறது. 

இந்நிலையில் தற்போது ஆஸ்திரேலிய வசூல் நிலவரம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. ஆஸ்திரேலியாவில் மூன்று வாரங்களில் 1 மில்லியன் ஆஸ்திரேலிய டாலர்கள் வசூல் செய்துள்ளது விக்ரம் திரைப்படம். இந்திய மதிப்பில் சுமார் 5.3 கோடி ரூபாயாகும். இது இதுவரை தமிழ் படங்கள் ஆஸ்திரேலியாவில் செய்யாத சாதனையாகப் பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

'சந்தோஷ்’ திரைப்படத்தை தடையை மீறி திரையிடுவோம்: பா ரஞ்சித் ஆவேசம்..!

அட்லி - அல்லி அர்ஜூன் படத்தின் அறிவிப்பு எப்போது? சன் பிக்சர்ஸ் வெளியிட்ட வீடியோ..!

ராமராஜன், நளினியை அவரது பிள்ளைகள் இணைத்து வைத்துவிட்டார்களா? பரபரப்பு தகவல்..!

வைரலாகும் ரகுல் ப்ரீத் சிங்கின் லேட்டஸ்ட் போட்டோஸ்!

ஆண்ட்ரியா லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments