Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

குறட்டை விடுவதில் இருந்து விடுதலை: புதிய கருவி கண்டுபிடிப்பு!

குறட்டை விடுவதில் இருந்து விடுதலை: புதிய கருவி கண்டுபிடிப்பு!

Advertiesment
குறட்டை விடுவதில் இருந்து விடுதலை: புதிய கருவி கண்டுபிடிப்பு!
, செவ்வாய், 19 செப்டம்பர் 2017 (14:31 IST)
பலருக்கும் குறட்டை விடுவது பெரும் பிரச்சனையாக இருக்கும். இதனால் அருகில் தூங்கும் நபரின் தூக்கமும் சேர்ந்து கெடும். தர்மசங்கடத்தை ஏற்படுத்தும் இந்த குறட்டை பிரச்சனையில் இருந்து விடுதலை பெற புதிய கருவி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


 
 
இந்த கருவி குறட்டை விடுவதை தடுக்கிறது என்பது ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. குறட்டை விடுவதை தடுக்க பெரிய அளவிலான புல்லாங்குழல் போன்ற ஒரு கருவி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
 
கடந்த 2005-ஆம் ஆண்டு குறட்டை விடும் 25 பேரை வைத்து இந்த கருவி சோதனை செய்யப்பட்டது. இவர்களில் பாதி பேர் இந்த கருவியை தொடர்ந்து வாசித்து வந்தனர். மற்றவர்கள் பயன்படுத்தவில்லை. சோதனைக்கு பின்னர் இந்த கருவியை வாசித்தவர்கள் குறட்டை விடுவதை நிறுத்தியுள்ளனர்.

webdunia

 
 
குறட்டை வருவதற்கு முக்கிய காரணம்  வாயின் உட்புறமாக உள்ள மேல் தசை தான். இந்த தசை மெல்லியதாக உள்ளதால் எளிதாக குறட்டை வருகிறது. ஆனால் இந்த புல்லாங்குழல் போன்ற பெரிய கருவியை வாசித்தால் வாயின் மேல் உள்ள அந்த தசை இறுக்கமடைந்து குறட்டை உருவாவது தடுக்கப்படுகிறது.
 
இதனை கண்டுபிடித்த ஆராய்ச்சியாளர்கள் குழுவுக்கு ஐஜி நோபல் விருது வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

செந்தில் பாலாஜி என்ன தீவிரவாதியா? - தினகரன் விளாசல்