Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஏழு அதிசயங்களின் ஒன்றான தாஜ்மஹாலின் யாரும் அறியா மர்ம பக்கங்கள்!!

ஏழு அதிசயங்களின் ஒன்றான தாஜ்மஹாலின் யாரும் அறியா மர்ம பக்கங்கள்!!
, வெள்ளி, 12 மே 2017 (16:16 IST)
நாம் அனைவரும் அறிந்திராத தாஜ்மஹாலின் கான்ட்ரோவெர்சி என்னவென்பதை பின்வரும் தொகுப்பில் காணலாம்..


 
 
தாஜ்மஹாலின் சுவர்களில் ஆங்காங்கே பலவித வண்ணங்களில் அலங்கரிக்கப்பட்டு இருப்பவை எல்லாம் எழுத்துக்கள். அவை, அல்லாவின் 99 பெயர்கள் என சொல்லப்படுகிறது. 
 
மேலும், இப்போது இருக்கும் வெள்ளை தாஜ்மஹாலைப் போல கருப்பு நிறத்திலும் ஒரு தாஜ்மஹால் இருந்ததுள்ளதாகவும், வெள்ளை தாஜ்மஹாலின் பிரதிபலிப்பாக இது கருதப்பட்டது. 
 
300 வருடங்களுக்கு முன்னரே இந்த கட்டத்தின் மதிப்பு 32 பில்லியன் இந்திய ரூபாயாம். தற்போதைய மதிப்பு 65 பில்லியன் இருக்கலாம்.
 
தாஜ்மஹாலில் வரையப்பட்டுள்ள டிசைன்கள் அனைத்தும் கீழிருந்து மேலாக ஒரே மாதிரியான அளவில் இருப்பதுபோல் இருக்கும் ஆனால் அது அப்படி இருப்பதில்லை. 
 
அவை ஒரே மாதிரியான வடிவ உருவத்தில் இருப்பதற்காக சிறப்பு கணிதவியலாளர்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.
 
எங்கிருந்து பார்த்தாலும் ஒரே மாதிரியாக தெரியும் சமச்சீரான கட்டடம் தாஜ்மஹால். இந்தியாவில் இந்த அளவுக்கு நேர்த்தியான கட்டடம் எதுவும் இல்லை.
 
இந்த கட்டடத்தை கட்ட 22 வருடங்கள் முழுமையாக எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. 1631 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த கட்டடம் 1953-ல் கட்டி முடிக்கப்பட்டது.
 
ஷாஜகான் இது போன்ற வேறு கட்டிடம் அமைந்துவிடக் கூடாது என்பதற்காக இதன் கட்டட வடிவமைப்பாளர்களின் கை விரல்களை வெட்டிவிட்டதாகவும் கூறப்படுகிறது. 
 
கட்டிடத்தின் வெளியே யமுனை நதி ஓடுவது நமக்கு தெரிந்த ஒன்று தான். ஆனால் கட்டித்தின் உள்ளும் ஒரு சிறு ஓடை உள்ளது. ஆனால், அந்த சிறிய ஓடை தொடங்கும் இடம் எதுவென்றே இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. 
 
தாஜ்மஹாலின் உள்ளே பெண் ஒருவர் அழும் குரல் அடிக்கடி கேட்பதாக ஒரு கருத்து நிலவுகிறது. இது எந்த அளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை.
 
தாஜ்மஹால் ஒரு சிவன் கோயில் என்றும் ஒரு தகவல் பரவி வருகிறது. தாஜ்மஹாலில் மறைக்கப்பட்ட மர்ம அறைகளில் சிவ பெருமாளின் சிலைகள் இருக்கிறது என கூறப்படுகிறது. 
 
இந்த தாஜ்மஹால் தேஜே மஹாலயாவாக இருந்தால் அது முகலாயர்களின் படையெடுப்புக்கு முன்னதாகவே இருந்திருக்கும். அதை அழகு படுத்தியவர்தான் ஷாஜகான் என்றும் கூறப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

1200-க்கு 1225 மதிப்பெண் பெற்ற மாணவன்: அடடே என்னெ ஒரு ஆச்சரியம்!