Publish Date: Thu, 24 Mar 2022 (07:30 IST)
Updated Date: Thu, 24 Mar 2022 (07:15 IST)
இந்திய கடற்படை ராமேஸ்வரம் உள்ளிட்ட தமிழக மீனவர்களை சிறை பிடிப்பதும் வழக்கமான ஒன்றாக இருந்து வரும் நிலையில் இன்றும் 16 மீனவர்களை இலங்கை கடற்படை சிறை பிடித்து அகற்றப்படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இராமேஸ்வரம் மீனவர்கள் 16 பேரை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படை சிறை பிடித்து உள்ளதாகவும் அவர்களுடைய இரண்டு படகுகளும் சிறைபிடிக்கப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன
இதனையடுத்து கைது செய்யப்பட்ட 16 மீனவர்கள் சிறையில் அடைக்கப்பட்டதாகவும் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய உள்ளதாகவும் கூறப்படுவதால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது
இந்த நிலையில் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை மீட்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மீனவர்கள் சார்பில் கோரிக்கை விடப்பட்டு வருகின்றன