Webdunia - Bharat's app for daily news and videos

Install App

Master பிளான்... கர்ப்பமானதை வெளியில் சொல்லாத காரணத்தை கூறிய ஸ்ரேயா சரண்!

Webdunia
வியாழன், 15 டிசம்பர் 2022 (13:27 IST)
நீண்ட நாள் ரகசியத்தை கூறிய நடிகை ஸ்ரேயா சரண்!
 
தமிழ் சினிமாவில் 2000 காலலாட்டத்தில் டாப் ஹீரோயினாக இருந்தவர் நடிகை ஸ்ரேயா சரண். இவர் தெலுங்கு, தமிழ் மொழிகளில் பல சூப்பர் படங்களில் நடித்திருக்கிறார். குறிப்பாக தமிழில் 'மழை, சிவாஜி, அழகிய தமிழ் மகன் 'போன்ற படங்களில் நடித்து சூப்பர் ஹிட் வெற்றியை கொடுத்தார். 
 
ஆனால், புது நடிகைகளின் வரவால் அவருக்கு வாய்ப்புகள் கிடைக்காமல் போனது. அதன் பின்னர் தனது வெளிநாட்டு காதலனை திருமணம் செய்துக்கொண்டு செட்டில் ஆகிவிட்டார். 
அவருக்கு ராதா என்ற மகள் இருக்கிறாள். திருமணத்திற்கு பிறகு ஸ்ரேயா தொடர்ந்து நடித்து வருகிறார். 
 
இந்நிலையில் கர்ப்பமானதை கூறாததற்கான காரணத்தை முதன் முறையாக தெரிவித்துள்ளார். அந்த சமயத்தில் நான் மிகவும் பயந்தேன். நான் உடல் பருமனாக இருப்பதை பற்றி என்ன எழுதுவார்கள் என எண்ணி அஞ்சினேன். ஆனாலும் நான் குழந்தை மீது அதிக அக்கறையும் கவனமும் கொண்டிருந்தேன். 
 
நான் கர்ப்பமாக இருப்பதை சொன்னால் யாரும் வாய்ப்பு தரமாட்டார்கள். குழந்தை பிறந்த பிறகு சினிமாவுக்கு வர பல வருடங்கள் ஆகிவிடும். அவ்வளவு சீக்கிரம் யாரும் வாய்ப்பு தர மாட்டார்கள். அதனால் தான் கர்ப்பமான விஷயத்தையே வெளியில் சொல்லவில்லை என்றார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

2018 பட இயக்குனர் ஜூட் ஆண்டனி இயக்கத்தில் நடிக்கும் ஆர்யா!

மீண்டும் இணையும் தனுஷ் & அனிருத் கூட்டணி… எந்த படத்தில் தெரியுமா?

துருவ் விக்ரம் நடிக்கும் படத்தை இயக்குகிறாரா ஷங்கர்?

சில பேர் என்னை அடிக்கிறார்கள்.. ஆனால் - டிராகன் நிகழ்வில் பிரதீப் ரங்கநாதன் பேச்சு!

அழகிய உடையில் கேட்வாக் போஸ் கொடுத்த மிருனாள் தாக்கூர்!

அடுத்த கட்டுரையில்
Show comments