சல்மான் கான் என்னுடன் நடிக்க தயங்கினார் - சோனம் கபூர் பேட்டி
சல்மான் கான் என்னுடன் நடிக்க தயங்கினார் - சோனம் கபூர் பேட்டி
Publish Date: Thu, 22 Sep 2016 (16:00 IST)
Updated Date: Thu, 22 Sep 2016 (16:13 IST)
இந்தி நடிகை சோனம் கபூர் ஒளிவுமறைவின்றி பேசுகிறவர். சல்மான் கான் குறித்தும், இந்திப் படவுலகில் நடக்கும் மது விருந்துகள் குறித்தும் அவர் அளித்த பேட்டியின் தமிழ் வடிவம் உங்களுக்காக.
சல்மான் கான் உங்களுடன் நடிக்க தயங்கினாராமே?
ப்ரேம் ரத்தன் தான் பயோ படத்தில் என்னை ஒப்பந்தம் செய்த போது, அனில் கபூர் என்னுடைய நெருங்கிய நண்பர். அவர் மகளுடன் எப்படி ரொமான்ஸ் செய்வது என்று அவர் முதலில் தயங்கினார். தயக்கத்துடன்தான் என்னுடன் அவர் நடித்தார்.
பாலிவுட்டில் நடிகைகள் மதுவருந்துவது அதிகரித்து வருகிறது, நீங்கள் எப்படி?
நான் மதுபானங்களை தொட்டதே இல்லை. அந்த பழக்கமே எனக்கு கிடையாது. அதை நினைத்துக்கூட பார்க்க மாட்டேன்.
பார்ட்டிகளில் மதுவை தவிர்க்க முடியாதே?
நான் குடிப்பதில்லை என்பதால் பார்ட்டிகளில் கலந்து கொள்வது இல்லை. அவற்றை புறக்கணித்து விடுவேன்.
மதுவுக்கு அடுத்தது காதல்...?
நான் இதுவரை யாரையும் காதலித்தது இல்லை.
இரவு நேரப் பார்ட்டிகளுக்குப் பதில் உங்கள் நேரத்தை எடுத்துக் கொள்வது எது?
இரவு நேரங்களில் புத்தகம் கையுமாகத்தான் இருப்பேன். எனது படுக்கையில் புத்தகங்கள் இருக்கும். தூக்கம் வராதபோது அந்த புத்தகங்களைத்தான் படிப்பேன்.
நீங்கள் அதிக செக்யூரிட்டிகள் வைத்துக் கொள்வதாக ஒரு குற்றச்சாட்டு இருக்கிறதே?
ஆமா, அப்படி விமர்சிக்கிறார்கள். நான் சினிமாவில் அறிமுகமானதிலிருந்து அவர்கள் இருக்கிறார்கள்.
அவர்கள் உங்களுக்கு அவசியமா?
கண்டிப்பாக. என் சொந்த வாழ்க்கை பற்றிய எல்லா விஷயங்களும் அவர்களுக்கு தெரியும். பாதுகாவலர்கள் இல்லாமல் என்னால் இருக்க முடியாது. எனது தேவைகளை அவர்கள் கவனித்துக்கொள்கிறார்கள். மற்றவர்கள் என்னிடம் நெருங்காமல் பார்த்துக் கொள்கிறார்கள்.
அவர்களை தவிர்க்கும் எண்ணம் இருக்கிறதா?
இதுவரை அப்படி எந்த எண்ணமும் இல்லை. பிரபலங்கள் எது செய்தாலும் விளம்பரமாகி விடுகிறது. இந்த நிலையில் பாதுகாவலர்கள் என்னை சுற்றி இருப்பது அவசியம். அவர்கள் எனது தனிப்பட்ட வாழ்க்கை சம்பந்தமான விஷயங்கள் வெளியே போகாமல் பார்த்துக்கொள்கிறார்கள்.