பிரபல தயாரிப்பாளர் இயக்குனர் அட்லீயை மோசமாக கலாய்த்து விமர்ச்சித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர்களில் ஒருவராக திகழும் இயக்குனர் அட்லீ பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் உதவியாளராக பணியாற்றியது நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். ஆனால் அப்பேற்பட்ட ஜாம்பவானிடம் பணியாற்றியும் திருட்டு கதைகளை தொடர்ச்சியாக இயக்கி பலரின் கிண்டலுக்கும் கேலிக்கும் ஆளாகி வருகிறார்.
இருந்தாலும் அவர் இயக்கும் அத்தனை படங்களுக்கு பிளாக் பஸ்டர் ஹிட் அடித்துவிடுகின்றது. சினிமாவை கனவாக வைத்துக்கொண்டு போராடிக்கொண்டிருக்கும் பல கடின உழைப்பாளி இயக்குனர்கள் இதனை ஏற்றுக்கொள்ள முடியாமல் உள்ளுக்குள்ளே புகைந்து வருகின்றனர்.
கடைசியாக அட்லீ இயக்கத்தில் வெளிவந்த மெர்சல் திரைப்படம் ரஜினி நடித்த மூன்று முகத்தின் அச்சு அசல் காப்பி என்று பலருக்கும் பச்சையாக தெரிந்தது. வழக்கமாக அட்லீ இயக்கிய படங்கள் வெளியான பின்பு தான் பழைய படங்களை காபி செய்துவிட்டார் என்கிற விமர்சனம் எழும். ஆனால், இந்த முறை படம் வெளியாகுவதற்கு முன்பே தளபதி 63 படத்தை என்னுடைய கதையை வைத்துதான் இயக்குகிறார் என்று ஒருவர் அட்லீ மீது பகிரங்கமாக குற்றம் சாட்டி அதிர்ச்சி அளித்தார்.
இந்த நிலையில் தற்போது அட்லி இயக்கிய மெர்சல் திரைப்படத்தின் கதையை ஏற்கனவே பதிவு செய்திருப்பதாக பிரபல தயாரிப்பாளர் கதிரேசன் புதிய சர்ச்சையை கிளப்பி அட்லியை கடுமையாக விமர்சித்துள்ளார்.
சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற இவர், "மூன்று முகம்" படத்தின் ரீமேக் உரிமை தன்னிடம் தான் இருந்தது என்று ஆனால், அட்லீயின் மெர்சல் படத்தை என்று போது மூன்று முகம் படத்தின் கதை போலவே இருந்ததால் எனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. நாங்கள் அந்த படத்தை லாரன்ஸ் வைத்து எடுக்கவும் நினைத்திருந்தோம். ஆனால், அதற்குள்ளாகவே அட்லீ அந்த அந்த படத்தை எடுத்து விட்டார். அட்லீயால் எனக்கு 4 கோடி நஷ்டம் இன்னும் எத்தனை காலம்தான் அட்லீ இது போன்று காப்பி அடித்து படம் எடுத்துக் கொண்டே இருப்பார் என்று அட்லீயை கடுமையாக விமர்சித்துள்ளார்.