ராஜீவ் கொலை வழக்கில் சிக்கி 29 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் முருகனின் தந்தை உயிரிழந்த நிலையில் அவரது இறுதி சடங்கைக் கூட பார்க்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள்தண்டனை அனுபவித்துவரும் பேரறிவாளன், சாந்தன், நளினி உள்ளிட்ட ஏழு பேரையும் விடுவிக்க வேண்டுமென, கடந்த செப்டம்பர் 2018ல் தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு கடிதம் அனுப்பப்பட்டது. ஆனால் ஆளுநரின் பதில் இரண்டு ஆண்டுகளாக கிடைக்காமல் இருந்தது. இதனால் அவர்கள் விடுதலை தாமதமாகி வருகிறது.
இந்நிலையில் சிறையில் இருக்கும் முருகனின் தந்தை நேற்று அதிகாலை புற்றுநோய் காரணமாக உயிரிழந்தார். இதையடுத்து அவரது இறுதி ஊர்வலத்தை வீடியோ கால் மூலமாகப் பார்க்கவேண்டும் தனது வழக்கறிஞர் புகழேந்தி மூலம் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தார்.
ஆனால் அவரது அவரது கோரிக்கை நேற்று மாலை அரசால் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதனை முன்கூட்டியே தெரிவித்து இருந்தால் நீதிமன்றத்தை நாடி இருக்கலாம். ஆனால் அரசு வேண்டுமென்றே காலதாமதத்தை ஏற்படுத்தி முருகனின் கோரிக்கையை நிராகரித்துள்ளது.