Publish Date: Wed, 30 Oct 2019 (08:56 IST)
Updated Date: Wed, 30 Oct 2019 (08:59 IST)
அஜித் நடித்த ’தீனா’ என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான இயக்குநர் ஏஆர் முருகதாஸ் அதன்பின் மீண்டும் அஜித் படத்தை இயக்க ஒரு சில முயற்சிகள் செய்தார். கஜினி திரைப்படம் கூட அஜித் நடிக்க இருந்தது தான். ஆனால் கடைசி நேரத்தில் திடீரென சூர்யா நடிக்கும் நிலை ஏற்பட்டது
இந்த நிலையில் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘தர்பார்’ படத்தை இயக்கி முடித்துள்ள ஏஆர் முருகதாஸ் அடுத்ததாக அஜித் படத்தை இயக்குவார் என்றும் இந்த படம் குறித்த பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாகவும் கூறப்பட்டது
இந்த நிலையில் ஏ.ஆர்.முருகதாஸ் அவர்களை தொடர்பு கொண்ட சூர்யா, இருவரும் இணைந்து ஒரு படத்தில் பணியாற்றலாம் என்று கூறியுள்ளார். ஆனால் அஜித் படம் குறித்த பேச்சுவார்த்தை நடந்து வந்ததால் சூர்யா படத்தை இயக்க ஏ ஆர் முருகதாஸ் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது
இந்த நிலையில் தற்போது கிடைத்துள்ள தகவலின்படி அஜித்தின் அடுத்த படத்தை ஏஆர் முருகதாஸ் இயக்க வாய்ப்பு இல்லை என்று செய்திகள் உள்ளது. இதனை அஜித் படத்தை நம்பி சூர்யா படத்தையும் ஏ.ஆர்.முருகதாஸ் இழந்துவிட்டதாக கூறப்படுகிறது. அனேகமாக ஏ.ஆர்.முருகதாஸின் அடுத்த படம் விஜய்யின் ‘துப்பாக்கி 2’ படமாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது