Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

திருமணத்துக்குப் பிறகும் நடிப்பேன் - சமந்தா பேட்டி

திருமணத்துக்குப் பிறகும் நடிப்பேன் - சமந்தா பேட்டி

Advertiesment
சமந்தா
முதல்முறையாக நாக சைதன்யா குறித்தும், திருமணத்துக்குப் பிறகு நடிப்பது குறித்தும் மனம் திறந்திருக்கிறார் சமந்தா. அவரது பேட்டி வருமாறு...

 
உங்கள் காதல் பற்றி கூறுங்கள்...?
 
நான் லவ் பண்றது யாரைன்னு தொரிஞ்சுக்க ஆர்வம் காட்டுறாங்க. இதுல மறைக்கிறதுக்கு எதுவும் இல்ல. நடிகர் நாக சைதன்யாவைத்தான் நான் லவ் பண்றேன்.
 
எப்போது திருமண தேதி?
 
அதை எங்க குடும்பத்தினர் அறிவிப்பாங்க. எங்க இரண்டு பேரின் பெற்றோர்களின் ஆசிர்வாதத்துடன் எங்கள் திருமணம் நடக்கும்.
 
எப்போதிலிருந்து காதலிக்கிறீங்க?
 
நான் தெலுங்கில் முதல் படத்தில் அறிமுகமான நாளில் இருந்தே நாகசைதன்யா எனக்கு நெருக்கமானவராகி விட்டார். உறவினர்களுக்கும் மற்றவர்களுக்கும் 3 மாதத்திற்கு முன்புதான் தெரிய வந்தது.
 
நாக சைதன்யாவிடம் உங்களுக்குப் பிடித்த விஷயங்கள்?
 
நாகசைதன்யாவிடம் எனக்கு பிடித்த வி‌ஷயங்கள் நிறைய உண்டு. குழப்பமாக இருந்த என் வாழ்க்கையை மாற்றி ஒரு நிலையான தன்மைக்கு கொண்டு வந்தது அவர்தான். ஒரு படகுக்கு துடுப்பு எப்படி முக்கியமோ அதுபோல் என்வாழ்க்கைக்கு அவர் முக்கியம்.
 
உங்க முடிவு உங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறதா?
 
சினிமாவை நேசிக்கும் ஒரு குடும்பத்திலேயே வாழ்க்கைப்படப்போவது மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறது.
 
திருமணத்துக்குப் பிறகு நடிப்பீர்களா?
 
எனக்கு தெரிந்தது நடிப்பு மட்டும்தான். அதை நான் தொடர்ந்து செய்வேன். நான் திருமணத்துக்குப் பிறகும் நடிக்க வேண்டும் என்பதுதான் நாக சைதன்யாவின் விருப்பமும். ரசிகர்கள் வேண்டாம்னு சொல்றவரை நடிப்பேன்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இருமுகன் 100 கோடி வசூல்... தயாரிப்பாளர் அறிவிப்பு