Publish Date: Wed, 09 Nov 2022 (19:31 IST)
Updated Date: Wed, 09 Nov 2022 (19:33 IST)
பாபர் மசூதி வழக்கில் இருந்து முன்னாள் துணை பிரதமர் அத்வானி விடுதலை செய்ததை எதிர்த்து பதிவு செய்யப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளன
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் பாஜக மூத்த தலைவர் அத்வானி உமாபாரதி முரளிமனோகர் ஜோஷி உள்பட 32 பேர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது
இந்த வழக்கில் 32 பேரையும் விடுதலை செய்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது
இந்த வழக்கின் விசாரணை முடிந்த நிலையில் சற்றுமுன் தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த தீர்ப்பில் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் விடுதலை செய்தது செல்லும் என்றும் இந்த மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்