Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ரஜினி ஒன்றும் பெரிய சூப்பர்ஸ்டார் அல்ல : நானேபடேகர் அதிரடி

Advertiesment
Actor nana patekar
ரஜினிகாந்த் மட்டுமல்ல.. எந்த நடிகரும் சூப்பர்ஸ்டார் அல்ல.. வெற்றி பெற வைக்கும் படத்தின் கதைதான் சூப்பர்ஸ்டார் என்று பாலிவுட் நடிகர் நானேபடேகர் கருத்து தெரிவித்துள்ளார்.


 

 
நடிகர் ரஜினிகாந்த் நடித்த கபாலி திரைப்படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியாகி உலகமெங்கும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இதுவரை ரூ.200 கோடிக்கும் மேல் இந்த படம் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
 
இந்நிலையில், பாலிவுட் நடிகர் நானே படேகர் செய்தியாளர் ஒருவரிடம் கூறும்போது “ஒரு படத்தின் கதைதான் சூப்பர்ஸ்டார். படம்தான் சூப்பர்ஸ்டார். ஒரு திரைப்படத்தின் கதை சரியாக அமைக்கப்பட்டிருந்தால், அறிமுக நடிகர்கள் நடித்தாலும் அந்தப் படம் வெற்றி அடையும். அதுவே ஒரு திரைப்படம் மோசமான கதையில் உருவாக்கப்பட்டிருந்தால், எவ்வளவு பெரிய நடிகர் நடித்தாலும், அந்த படத்தை வெற்றி பெறச் செய்ய முடியாது.
 
பெரிய கதாநாயகர்களுக்காக முதல் 2 அல்லது 3 நாட்கள் மட்டும்தான் ரசிகர்கள் வருவார்கள். ஆனால், படம் சரியில்லை என்றால்,  கண்டிப்பாக அது தோல்விப்படமாகவே அமையும்” என்று கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கேரளாவில் கபாலிக்கு எதிராக ஒரு கலகக்குரல்