Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கேரளாவில் கபாலிக்கு எதிராக ஒரு கலகக்குரல்

கேரளாவில் கபாலிக்கு எதிராக ஒரு கலகக்குரல்

கேரளாவில் கபாலிக்கு எதிராக ஒரு கலகக்குரல்
, வியாழன், 28 ஜூலை 2016 (13:29 IST)
கேரளாவில் கபாலி பிரமாண்டமாக வெளியாகியுள்ளது. மோகன்லாலின் ஆசீர்வாத் சினிமாஸ் படத்தை அங்கு வெளியிட்டுள்ளது.


 


தொலைக்காட்சி, பத்திரிகை, இணையதளம் என்று சகல மீடியாவும் கபாலி குறித்த செய்திகளை முன்னுரிமை தந்து வெளியிடுகின்றன. இதற்கு எதிர்ப்பு வரும் என்பது தெரிந்ததுதான். யாரிடமிருந்து என்பதுதான் கேள்வி. இதோ, முதல் எதிர்ப்பை இயக்குனர் வினயன் பதிவு செய்துள்ளார்.
 
கேரளாவில் உள்ள மலையாள சேனல்களும், பத்திரிகைகளும் வேற்று மொழிப்படமான கபாலிக்கு ஏன் இத்தனை முக்கியத்துவத்தை தருகின்றன என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். மலையாள சினிமாவுக்கு இதுபோன்ற முக்கியத்துவம் ஏன் அளிக்கப்படுவதில்லை என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். 
 
வினயனின் கேள்வி ஒருவகையில் நியாயமானது. நமது இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் இந்தி, ஆங்கிலப் படங்களுக்கு எதிராக எப்போதும் பேசி வந்திருக்கிறார்கள். சென்னையில் ஆங்கில, இந்தி திரைப்படங்களை ஏன் ரசிகர்கள் இவ்வளவு விரும்பிப் பார்க்கிறார்கள்? அவர்களுக்கு என்ன புரியும்? ஏன் தமிழ்ப் படத்தைப் பார்த்தால் என்ன? என்றெல்லாம் சமீபத்தில்கூட நடிகர் ராதாரவி தனக்கேயுரிய 'பாஷை'யில் திட்டித் தீர்த்தார். கபாலி போன்று ஒரு வேற்றுமொழிப் படம் தமிழகத்தில் கொண்டாடப்பட்டால், மொத்த தமிழ் திரையுலகமும் தெருவில் இறங்கிப் போராடியிருக்கும். 
 
நிற்க. வினயனின் இந்த குற்றச்சாட்டுக்குப் பின்னால் வேறு சில காரணங்களும் உள்ளன. மம்முட்டியின் கசாபா திரைப்படம் கபாலிக்கு முன்பு வெளியாகி நல்ல வசூலை பெற்று வந்தது. அதேபோல் பிஜு மேனன் நடித்த அனுராக கருக்கின்வெள்ளம் திரைப்படமும். நன்றாக ஓடிக் கொண்டிருந்த இந்தப் படங்கள் கபாலிக்காக மாற்றப்பட்டன. அதையும் வினயன் கண்டித்திருக்கிறார்.
 
கபாலி திரைப்படத்தை மோகன்லாலின் ஆசீர்வாத் சினிமாஸ் கிட்டத்தட்ட எட்டு கோடிகளுக்கு வாங்கி வெளியிட்டிருக்கிறது. வினயன் சூப்பர் ஸ்டார் நடிகர்களுக்கு எதிரானவர். முக்கியமாக மோகன்லால். தொடர்ச்சியாக மோகன்லால், மம்முட்டியின் ஸ்டார் பவருக்கு எதிராக பேசி வருகிறவர். அதுவும் வினயனின் கபாலி எதிர்ப்புக்கு ஒரு காரணம் என கூறப்படுகிறது.
 
கபாலி என்ற வேற்று மொழிப் படத்துக்கு ஏன் இத்தனை முக்கியத்துவம்? மலையாளப் படங்களுக்கு ஏன் இந்த முக்கியத்துவம் தரப்படவில்லை? என்பதான குற்றச்சாட்டுகளை வினயன் மலையாள திரைப்பட சங்கங்களை நோக்கி வைத்துள்ளார். இதனை ஏன் சங்கங்கள் கண்டு கொள்ளாமல் இருக்கின்றன என்று வினயன் பிரச்சனையின் சுக்கானை சங்கங்களை நோக்கி திருப்பியிருப்பதால் கபாலிக்கு எதிராக இன்னும் சிலர் களமிறங்கலாம் என்று நம்பப்படுகிறது. 
 
வினயனின் பல படங்கள் தமிழில் வெளியாகியிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நகை வேட்டையில் இறங்கிய மான் வேட்டை சல்மான்