Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

எனக்கு எப்படி பாஸிட்டிவ் வந்தது என இப்போது வரை தெரியவில்லை… சி எஸ் கே கோச் பாலாஜி பதில்!

Advertiesment
L Balaji talked about how he conceived coorona
, திங்கள், 24 மே 2021 (12:33 IST)
சி எஸ் கே அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் லஷ்மிபதி பாலாஜி கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சையில் குணமாகி வந்துள்ளார்.

சென்னை அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் பாலாஜிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. மேலும் அந்த அணி நிர்வாகத்தினர் சிலருக்கும் பாஸிட்டிவ் என வந்ததால், மேலும் கொலகத்தா அணியிலும் சில வீரர்களுக்கு கொரோனா பாஸிட்டிவ் என வந்ததால் ஐபிஎல் தொடரே பாதியில் நிறுத்தப்பட்டது. இப்போது சிகிச்சையில் தேறி வந்துள்ள பாலாஜி தங்களுக்கு எப்படி கொரோனா தொற்று வந்தது என்பதே இதுவரை தெரியவில்லை எனக் கூறியுள்ளார்.

சமீபத்தில் இணையதளம் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் ’ எனக்கு பாஸி்ட்டிவ் வந்ததும் எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. ஏனென்றால் நாங்கள் பயோ பபுள் விதிகளை மீறவே இல்லை. இதனால் அணியின் பயோபபுள் சூழலே கேள்விக்குறியாகிவிடுமே என கவலைப்பட்டேன். முடிவு வந்ததும் அணி வீரர்களைவிட்டு ஒதுங்கி தனிமையானேன். 

என்னுடைய கவலை என்னுடன் நெருக்கமாக இருந்த வீரர்களை பற்றியதாகதான் இருந்தது. என்னால் யாருக்காவது தொற்று ஏற்பட்டு பாதிக்கப்பட்டால் என்ன செய்வது என்பதுவே என் முதல் கவலையாக இருந்தது. ’ எனக் கூறியுள்ளார். இப்போது கொரோனாவால் பாதிக்கப்பட்ட வீரர்கள் அனைவரும் சிகிச்சையில் முழுவதுமாக குணமாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கிழிந்த ஷூக்களை ஒட்டி விளையாடும் ஜிம்பாப்வே வீரர்கள்!