Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்த சஹாலின் பேச்சு – ட்ரெண்டான மாஷ் அப்

Advertiesment
ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்த சஹாலின் பேச்சு – ட்ரெண்டான மாஷ் அப்
, ஞாயிறு, 30 ஜூன் 2019 (12:12 IST)
நடைபெற்ற உலகக்கோப்பை போட்டியில் இந்தியா ஒரு தடவை கூட தோற்காமல் விளையாடியுள்ளதை கொண்டாடும் வகையில் ஐசிசி யுவேந்திர சஹாலின் நேர்காணலோடு ஒரு மாஷ் அப் வீடியோவை வெளியிட்டுள்ளது.

இந்திய அணியின் முக்கியமான சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவர் யுவேந்திர சஹால். உலக கோப்பை போட்டியில் இவர் விளையாடுவது இதுவே முதல்முறை. இன்று இங்கிலாந்தோடு இந்தியா மோதவிருக்கும் ஆட்டத்தை பலரும் எதிர்நோக்கியிருக்கும் நேரத்தில் சஹாலின் பேட்டி ட்ரெண்ட் ஆகியுள்ளது.

அதில் பேசிய சஹால் “உலக கோப்பை எங்களுக்கு மிகவும் சவாலானதாகதான் இருக்கிறது. ஒவ்வொரு போட்டியிலும் பல்வேறு வியூகங்களை வகுத்து விளையாடுகிறோம். எங்கள் அணியின் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் சிறப்பானவர்கள்” என்று பேசினார்.

கேள்வி கேட்பவர் “உங்களுக்கு பேட்டிங் செய்ய அதிக வாய்ப்புகள் கிடைப்பதில்லை என்ற கவலை உங்களுக்கு இருக்கிறதா?” என கேட்க, “நான் ஒரு சிறந்த சுழல்பந்து வீச்சாளர். அணியில் எனது பங்கு என்ன என்பதை நானும், எனது அணியினரும் நன்றாகவே உணர்ந்திருக்கிறோம்” என கூறியுள்ளார்.

இதுவரை இந்தியா விளையாடிய போட்டிகளின் மாஷ் அப் வீடியோ இந்த வீடியோவுடன் இணைக்கப்பட்டு வெளியாகியுள்ளது.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஸ்டார்க் அபார பந்துவீச்சு: ஆஸ்திரேலியாவிடம் சரணடைந்த நியூசிலாந்து