Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஆஸ்திரேலியா- நியூஸிலாந்து ஆட்டம்: கணிக்க முடியாத ஆட்டம்

ஆஸ்திரேலியா- நியூஸிலாந்து ஆட்டம்: கணிக்க முடியாத ஆட்டம்
, சனி, 29 ஜூன் 2019 (20:58 IST)
தற்போது நடைபெற்று வரும் ஆஸ்திரேலியா- நியூஸிலாந்து போட்டியில் யார் வெற்றிபெறுவார்கள் என்பதை கணிக்கவே முடியாமல் ரசிகர்கள் குழம்பி வருகின்றனர்.

இதுவரை நடைபெற்ற போட்டிகளில் 7 ஆட்டங்களில் விளையாடிய ஆஸ்திரேலியா 6 ஆட்டங்களில் வெற்றியும் 1 ஆட்டத்தில் தோல்வியும் அடைந்து பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. நியூஸிலாந்து அணி இதுவரை ஆடிய 7 போட்டிகளில் 5 போட்டிகளில் வெற்றியும் 1 போட்டியில் தோல்வியும் அடைந்துள்ளது. இந்தியாவுடன் நியூஸிலாந்துக்கு நடக்க இருந்த ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்டு புள்ளிகள் பகிர்ந்தளிக்கப்பட்டன. இதனால் தர வரிசையில் நியூஸிலாந்து மூன்றாம் இடத்தில் உள்ளது.

முதலும், மூன்றாவதும் மோதுவதால் இந்த ஆட்டம் ரொம்ப எதிர்பார்க்கப்பட்டது. அதற்கேற்றார் போல் இருவரும் ஒருவருக்கு ஒருவர் கடினமான ஆட்டக்காரர்களாக இருக்கிறார்கள். 250+ ரன்கள் என்பது இரண்டு அணிகளும் எளிதில் அடித்து விட கூடியவைதான்.

டாஸ் வென்று பேட்டிங் செய்ய ஆரம்பித்த ஆஸ்திரேலியாவை 250ஐ தாண்டாத அளவுக்கு கடினமான பந்துவீச்சை தந்திருக்கிறது நியூஸிலாந்து. ஆஸ்திரேலியா 50 ஓவர்களுக்கு விக்கெட் இழக்காமல் விளையாடி 230+ ரன்களை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அது நியூஸிலாந்துக்கு எளிதான இலக்கு என்பதால் நியூஸிலாந்து பந்துவீச்சில் கவனம் காட்ட வேண்டும்.

இதே நிலைதான் நாளைய இந்தியா-இங்கிலாந்து ஆட்டத்திலும்! வெற்றி கணிப்பு 50-50 என்ற நிலையில்தான் இருக்கிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாகிஸ்தானுக்கு 228 ரன்கள் இலக்கு : வழக்கம்போல தோற்க போகிறதா ஆப்கானிஸ்தான்?