இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 30 வயதிலேயே லெஜண்ட் ஆகிவிட்டார் என யுவ்ராஜ் சிங் தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியை பற்றி அவரின் நெருங்கிய நண்பருமான முன்னாள் வீரர் யுவ்ராஜ் சிங் வானளாவப் புகழ்ந்து பேசியுள்ளார். அதில் இந்திய அணிக்குள் கோலி வந்த போதே அவர் நம்பிக்கை அளிக்கும் வீரராகவே இருந்தார். அதனால் தான் அவருக்கு 2011 ஆம் உலகக்கோப்பை தொடரில் அவருக்கு வாய்ப்புக் கிடைத்தது.
அவர் கடினமாகவும் ஒழுக்கமாகவும் பயிற்சி செய்வார். உலகிலேயே தான் சிறந்த பேட்ஸ்மேனாக வரவேண்டும் என்ற ஆசை அவருக்கு இருந்தது. எல்லா வீரர்களும் ஓய்வு பெறும்போதுதான் லெஜண்ட் ஆவார்கள். ஆனால் கோலி 30 வயதிலேயே லெஜண்ட் ஆகிவிட்டார் எனக் கூறியுள்ளார்.