யுவ்ராஜ் சிங் ஓய்வு ? – பிசிசிஐ உடன் பேச்சுவார்த்தை !

Webdunia
திங்கள், 20 மே 2019 (09:00 IST)
இந்திய மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான யுவ்ராஜ் சிங் சர்வதேச மற்றும் முதல்தர கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறப்போவதாக பிசிசிஐ வட்டாரங்களில் இருந்து செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்திய அணி 2011 ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடரை வென்றதில் முக்கிய பங்காற்றியவர் யுவ்ராஜ் சிங். இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களில் சிறந்தவர் எனப் பலராலும் போற்றப்பட்டவர். சில ஆண்டுகளாக அணியில் இடம் கிடைக்காமல் தவித்து வந்த இப்போது ஓய்வுபெறும் முடிவை எடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஓய்வு சம்மந்தமாக இப்போது அவர் பிசிசிஐ உடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகிறது. மேலும் பிசிசிஐ ஒப்புதலுடன் வெளிநாடுகளில் நடக்கும் டி20 போட்டிகள் மற்றும் கவுண்ட்டி போட்டிகளில் விளையாட இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஐபிஎல் தொடரில் இந்த ஆண்டு மும்பை அணிக்காக விளையாடிய யுவ்ராஜ் சிங் முதல் 4 ஆட்டங்களில் மட்டுமே வாய்ப்பளிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தகக்து. தற்போது 37 வயதாகும் யுவ்ராஜ் சிங் இனி இந்திய அணியில் இடம்பிடிப்பது முடியாத காரணம் என்பதால் இந்த முடிவை எடுத்திருக்கக் கூடும் எனத் தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடர்: கேப்டனாக கே.எல். ராகுல்; மீண்டும் அணியில் ருதுராஜ் !

முத்துசாமி செஞ்சுரி.. மார்கோ 93 ரன்கள்.. 500ஐ நெருங்கியது தெ.ஆப்பிரிக்காவின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோர்..!

2 நாட்களில் முடிந்த ஆஷஸ் டெஸ்ட்.. ஆஸ்திரேலியாவுக்கு $3 மில்லியன் இழப்பு..!

ஆஷஸ் முதல் டெஸ்ட்.. ஆஸ்திரேலியா அபார வெற்றி.. 10 வீழ்த்தி வெற்றிக்கு வித்திட்ட ஸ்டார்க்..!

2வது இன்னிங்ஸில் இங்கிலாந்து ஆல்-அவுட்.. ஆஸ்திரேலியா வெற்றி பெற டார்கெட் எவ்வளவு?

அடுத்த கட்டுரையில்
Show comments