Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

உலக ரக்பி போட்டிகளில் ரஷ்யா விளையாட தடை! – ரஷ்ய விளையாட்டு வீரர்கள் கலக்கம்!

உலக ரக்பி போட்டிகளில் ரஷ்யா விளையாட தடை! – ரஷ்ய விளையாட்டு வீரர்கள் கலக்கம்!
, செவ்வாய், 1 மார்ச் 2022 (09:53 IST)
உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடர்ந்துள்ள நிலையில் பல்வேறு உலகளாவிய போட்டிகளில் இருந்து ரஷ்யா நீக்கப்பட்டு வருகிறது.

உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடர்ந்துள்ளதற்கு உலக நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. கடந்த 7 நாட்களாக ரஷ்யா தொடர்ந்து போரில் ஈடுபட்டு வரும் நிலையில் சர்வதேச கால்பந்து தொடர்களில் இருந்து ரஷ்யா இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக ஃபிபா அறிவித்துள்ளது.

முன்னதாக உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் ரஷ்யாவுடன் விளையாட மாட்டோம் என போலந்து தெரிவித்திருந்தது. ஐஸ் ஹாக்கி விளையாட்டு போட்டியை நடத்தும் உரிமையை ரஷ்யாவிடம் இருந்து சர்வதேச ஐஸ் ஹாக்கி கூட்டமைப்பு பறித்தது.

தொடர்ந்து தற்போது உலக ரக்பி போட்டிகளில் ரஷ்யா, பெலாரஸ் நாடுகள் விளையாடுவதற்கு உலக ரக்பி நிர்வாகக் குழு தடை விதித்துள்ளது. ரஷ்ய விளையாட்டு வீரர்கள் இவ்வாறான தடைகளால் கலக்கத்தில் உள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

2வது டெஸ்ட்: 198 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா வெற்றி