உக்ரைனுக்கு ஆயுதங்கள் அளிக்கும் நாடுகள் அவர்கள் அளிக்கும் ஆயுதங்கள் ரஷ்யா படைகளுக்கு எதிராக பயன்படுத்தப்பட்டால் அதற்கு அந்தந்த நாடுகளை பொறுப்பாகும் என ரஷ்ய அதிபர் புதின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே கடந்த 6 நாட்களாக போர் நடைபெற்று வரும் நிலையில் உக்ரைன் நாட்டிற்கு ஆதரவாக உலகின் பல்வேறு நாடுகள் நிதி உதவி மற்றும் ராணுவ உதவி அளித்து வருகின்றன
குறிப்பாக மேற்குலக நாடுகள் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில் மேற்குலக நாடுகள் விதிக்கும் அடுத்தடுத்த பொருளாதார தடைகளால் ரஷ்யாவில் இருந்து வெளிநாடுகளுக்கு பணம் அனுப்ப ரஷ்ய அரசு தடை செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் உக்ரைனுக்கு வெளிநாடுகள் வழங்கும் ஆயுதங்கள் ரஷ்ய படைகளுக்கு எதிராக பயன்படுத்தப்பட்டால் அது அந்தந்த நாடுகளை பொறுப்பு என ரஷ்யா எச்சரிக்கை செய்து உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.