தோனியை விட இவரை தான் எனக்கு ரொம்ப பிடிக்கும்: சென்னையில் ஹர்மன்பிரீத் கௌர் பேட்டி..!

Mahendran
வியாழன், 13 நவம்பர் 2025 (15:52 IST)
மகளிர் ஒருநாள் உலகக் கோப்பையை முதல்முறையாக வென்று சாதனை படைத்த இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கௌருக்கு, சென்னையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மேளதாளங்கள் முழங்க பிரமாண்ட மாலை அணிவிக்கப்பட்டு கௌர் கௌரவிக்கப்பட்டார்.
 
மாணவிகள் இந்திய அணியின் வெற்றி கொண்டாட்டத்தை நடித்து காட்டி மகிழ்வித்தனர். இதை தொடர்ந்து, மாணவ மாணவிகளுடன் கௌர் கலந்துரையாடினார்.
 
அப்போது, மாணவர் ஒருவர் "தோனி, விராட் கோலி - இவர்களில் யார் உங்களுக்குப் பிடித்த வீரர்?" என்று கேள்வி எழுப்பினார். உடனடியாக கௌர் "எம்.எஸ்.தோனி" என்று பதிலளித்தார். 
 
இந்த கேள்விக்கு அரங்கமே ஆர்ப்பரித்தது. பின்னர், "தோனி, ஸ்மிருதி மந்தனா – யாருக்கு அதிக விருப்பம்?" என்று கேட்கப்பட்டபோது, "ஸ்மிருதி மந்தனா" என்று பதிலளித்து கூட்டத்தை ஆச்சரியப்படுத்தினார். இந்தக் கலந்துரையாடல் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூன்று ஆண்டுக்கு பின் மீண்டும் ஐபிஎல்-க்கு திரும்பும் வாட்சன்.. எந்த அணியின் பயிற்சியாளர்?

ஐபிஎல் 2026 சீசனில் RCB அணிக்கு வேறு home மைதானமா?... பரவும் தகவல்!

விவாகரத்துக்கு பின் பயந்து நடுங்கினேன்.. சானியா மிர்சாவின் அதிர்ச்சி பேட்டி..!

நம்ம புள்ளைங்கதான் டாப்ல… ஐசிசி ஒருநாள் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் இந்தியா ஆதிக்கம்!

பாகிஸ்தானில் இருந்து வெளியேற விரும்பும் இலங்கை அணி வீரர்கள்.. ஆனால் எச்சரித்த அணி நிர்வாகம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments