Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோப்பையை வென்றுவிட்டதால் ஐபிஎல்-இல் இருந்து ஓய்வு பெறுகிறாரா கோலி?

Siva
புதன், 4 ஜூன் 2025 (13:42 IST)
விராட் கோலியின் 18 ஆண்டு ஐபிஎல் கனவு நிறைவேறிவிட்டதை அடுத்து, அவர் ஐபிஎல் போட்டியில் இருந்தும் ஓய்வு பெறுவாரா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.
 
சமீபத்தில் டெஸ்ட் தொடரிலிருந்து ஒதிவு பெறுவதாக அறிவித்த விராட் கோலி, ஐபிஎல் தொடரிலிருந்து ஓய்வு குறித்து கேட்ட கேள்விக்கு பதில் கூறிய போது,
 
"ஓய்வு என்பது எப்போது வரும் என்பது குறித்து நான் யோசிக்கவில்லை. ஆனால் அதே நேரத்தில், ஓய்வு பெறும் நாள் தொலைவில் இல்லை. அந்த நாள் வந்ததும், நான் பெருமையுடன் ஓய்வு கொள்வேன்," என்று தெரிவித்துள்ளார்.
 
ஆனால் அதே நேரத்தில், "இப்போதைக்கு ஐபிஎல் கொண்டாட்டங்களில்தான் எனது கவனம் இருக்கிறது," என்றும், "ஓய்வு குறித்து விரைவில் அறிவிப்பேன்," என்றும் தெரிவித்துள்ளார்.
 
மேலும், "நான் இன்னும் சில ஆண்டுகள் மட்டுமே கிரிக்கெட் விளையாட வாய்ப்பு உள்ளது. எந்த ஒரு விஷயத்திற்கும் முடிவு இருக்கிறது போல், என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கைக்கும் ஒரு முடிவு இருக்கிறது. அப்போது நான் யோசித்து ஒரு முடிவு எடுப்பேன்," என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
 
எனவே, இப்போதைக்கு அவர் ஓய்வு குறித்து அறிவிப்பாரா அல்லது இன்னும் சில ஆண்டுகள் ஐபிஎல் தொடரில் விளையாடுவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெங்களூருவில் 80,000 இருக்கைகளோடு உருவாகும் புதிய மைதானம்… கர்நாடக அரசு ஒப்புதல்!

ரிஷப் பண்ட்டை எல்லாம் அவர் போக்கில் விட்டுவிட வேண்டும் –சச்சின் பாராட்டு!

ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து ஒயிட்வாஷ் ஆகும்: மெக்கரெத் எச்சரிக்கை..!

சிஎஸ்கே அணியில் இருந்து வெளியேறுகிறாரா அஸ்வின்? பரபரப்பு தகவல்..!

சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் கோலியின் அண்மைய புகைப்படம்… ரசிகர்கள் ஆச்சர்யம்!

அடுத்த கட்டுரையில்
Show comments