Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல் தொடரில் எந்த வீரரும் படைக்காத சாதனையைப் படைத்த க்ருனாள் பாண்ட்யா!

vinoth
புதன், 4 ஜூன் 2025 (10:34 IST)
17  ஆண்டுகளாக  பட்டம் வெல்லவில்லை என்றாலும் ஐபிஎல் அணிகளிலேயே அதிக ரசிகர்களைக் கொண்ட ஒரு அணியாக ஆர் சி பி அணி உள்ளது. அந்த அளவுக்கு கர்நாடகா தாண்டியும் அந்த அணிக்கு பரவலான ரசிகர் பட்டாளம் உள்ளது. அதனால் உலகம் முழுவதும் உள்ள ஆர் சி பி அணி ரசிகர்கள் இந்த வெற்றியைக் கொண்டாடி வருகின்றனர்.

இந்த வெற்றிக்கு மிக முக்கியக் காரணம் இந்தமுறை ஆர் சி பி சமநிலையான அணியை எடுத்தது என்று வல்லுனர்கள் கூறி வருகின்றனர். இத்தனை ஆண்டுகளாக அந்த அணி அதிகளவில் பேட்ஸ்மேன்கள் மேல் மட்டுமே கவனம் செலுத்தி வந்தது. நல்ல பவுலர்களை எடுக்கவில்லை. ஆனால் இம்முறை ஹேசில்வுட், புவனேஷ்வர் குமார், யாஷ் தயாள், குருனாள் பாண்ட்யா என தரமான பவுலர்கள் அணிக்குள் இருந்தது அந்த அணிக் கோப்பையை வெல்ல உதவியது. அந்த அணியில் இந்த சீசனில் 9 வீரர்கள் ஆட்டநாயகன் விருதைப் பெற்றார்கள்.

இறுதிப் போட்டியில் சிறப்பாக பந்துவீசி 4 ஓவர்களில் 2 விக்கெட்களை வீழ்த்தி 14 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்த க்ருனாள் பாண்ட்யா ஆட்டநாயகன் விருதைப் பெற்றார். இது ஐபிஎல் இறுதிப் போட்டியில் அவர் பெறும் இரண்டாவது ஆட்டநாயகன் விருதாகும். 2017 ஆம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணியில் அவர் இடம்பெற்றிருந்த போது இறுதிப் போட்டியில் ஆட்டநாயகன் விருதை வென்றிருந்தார். இதுவரை எந்தவொரு வீரரும் ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் இரண்டு முறை ஆட்டநாயகன் விருதை வென்றதில்லை.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்திய அணி ஆசியக் கோப்பைத் தொடரில் விளையாடவேக் கூடாது… இந்திய முன்னாள் வீரர் கருத்து!

டெவால்ட் பிரேவிஸ் குறித்து நான் இப்படிதான் சொன்னேன்… அஸ்வின் விளக்கம்!

ஆசியக் கோப்பை அணியில் ஷுப்மன் கில்லுக்கே இடமில்லையா?

ஆசியக் கோப்பை தொடர்… பாகிஸ்தான் அணியில் பாபர் ஆசாமுக்கு இடம் மறுப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments