Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சச்சின் , சேவாக் சாதனையை தோனி முறியடிப்பாரா ...?

Advertiesment
சச்சின் , சேவாக் சாதனையை  தோனி முறியடிப்பாரா ...?
, திங்கள், 21 ஜனவரி 2019 (12:40 IST)
சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்திய அணி  2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. அதில்  அற்புதமாக மேட்ச் பினிஸிங் செய்த தோனியை எல்லோரும் பாராட்டி வருகின்றனர்.
அடுத்ததாக இந்திய அணி நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரில் பங்கேற்கிறது. இப்போட்டியில் தோனி சிறப்பாக விளையாடினால் சச்சின் சேவாக் சாதனையை முறியடிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் மூன்று அரைசதம் அடித்து தன் பழைய அதிரடியைத் தொடங்கிய தோனி, நியூசிலாந்து மண்ணில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர் என்ற சாதனையை படைப்பாரா என அவரது ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.தோனியின்  சராசரி 90.6 ஆகும். 
 
சச்சின் நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் 18 போட்டிகளில் 652 ரன்கள் அடித்துள்ளனர். சேவாக் 12 போட்டிகளில் 598 ரன்கள் அடித்துள்ளார். தோனி 12 போட்டிகளில் 556 ரன்கள் அடித்துள்ளார்.
 
 தோனி இன்னும் 196 ரன்கள் எடுத்தால் சச்சின் சாதனையை முந்தி நியூசிலாந்து மண்ணில் அதிக ரன்கள் எடுத்த இந்திய வீரர்கள் வரிசையில் முதல் இடம் பிடிப்பார் என்று தகவல் வெளியாகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நியுசிலாந்து சென்ற இந்திய அணி – உற்சாக வரவேற்பு…