Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நியுசிலாந்து சென்ற இந்திய அணி – உற்சாக வரவேற்பு…

Advertiesment
நியுசிலாந்து சென்ற இந்திய அணி – உற்சாக வரவேற்பு…
, திங்கள், 21 ஜனவரி 2019 (08:07 IST)
ஆஸ்திரேலியாவில் ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடரை வென்றுள்ள இந்திய அணி அங்கிருந்த் நேராக நியுசிலாந்து கிளம்பிச் சென்றுள்ளது.

ஆஸ்திரேலியாவில் இந்திய அணி மூன்று மாத சுற்றுப்பயணமாக சென்று டெஸ்ட், டி 20 மற்றும் ஒருநாள் போட்டித் தொடர்களில் விளையாடியது. அதில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் வெற்றியும் டி 20 தொடரில் சமன் செய்தும் வரலாற்று சிறப்புமிக்க சாதனையை நிகழ்த்தியுள்ளது.

ஆஸ்திரேலியாத் தொடர் வெற்றிக்குப் பிறகு இந்திய அணி நேரடியாக அங்கிருந்து நியுசிலாந்துக்கு சென்றுள்ளது. நியுசிலாந்தின் ஆக்லாந்து நகர் விமான நிலையத்தில் சென்று இறங்கிய இந்திய் அணியினருக்கு அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

அங்கு இந்திய அணி 3 வாரக் காலங்கள் தங்கி கிரிக்கெட் விளையாட இருக்கிறது. இதில் 5 ஒருநாள் போட்டிகளும் 3 டி 20 போட்டிகளும் அடக்கம்.

நியூசிலாந்திற்கு சென்று இதுவரை 7 ஒருநாள் போட்டித் தொடரில் இந்திய அணி விளையாடியுள்ளது. அதில் ஒருமுறை மட்டும் இந்திய அணி தொடரை வென்றுள்ளது. இருமுறை தொடரை சமன் செய்துள்ளது. 4முறை நியூசிலாந்து தொடரை வென்றுள்ளது. எனவே இம்முறை தொடரைக் கைவசமாக்கும் முனைப்பில் இந்திய அணி உள்ளது. ஆஸ்திரேலியாவில் பெற்ற வெற்றி இந்திய அணிக்கு உற்சாகத்தை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடர் ...வேகப்பந்து வீச்சாளர் விலகல்...