பந்தை சுரண்டிய பிரபல கிரிக்கெட் வீரருக்கு தடை: ஐசிசி அதிரடி

Webdunia
புதன், 13 நவம்பர் 2019 (21:03 IST)
ஆப்கானிஸ்தான் மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கு இடையே இந்தியாவில் மூன்று டி20 போட்டிகள் நடைபெற்றது. மூன்றிலும் வெற்றி பெற்ற மே.இ.தீவுகள் அணி 3-0 என்ற கணக்கில் தொடரை வென்றது
 
இந்த நிலையில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 3வது டி20 போட்டியில் மே.இ.தீவுகளின் விக்கெட் கீப்பர் பூரன், பந்தை தனது நகத்தால் சுரண்டிய வீடியோ ஒன்று பெரும் சர்ச்சைக்குள்ளானது. இதுகுறித்த வீடியோக்களை ஆய்வு செய்த ஐசிசி உறுப்பினர்கள் பூரன் வேண்டுமென்றே பந்தை சுரண்டி சேதப்படுத்தியது உறுதி செய்யப்பட்டது
 
இதனையடுத்து பூரனுக்கு இரண்டு டெஸ்ட் அல்லது நான்கு ஒருநாள் அல்லது நான்கு டி20 போட்டிகளில் விளையாட தடை விதித்துள்ளது. இதுகுறித்து பூரன் கூறுகையில் நான் செய்தது தவறுதான். தண்டனையை ஏற்றுக்கொள்கிறேன். இனி இவ்வாறு தவறு செய்ய மாட்டேன்’ என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆசிய கோப்பை: வங்கதேச 'ஏ' அணியுடன் இந்தியா 'ஏ' அரையிறுதி மோதல்

46 ஆண்டுகளுக்குப் பிறகு… சாதனை படைத்த நியுசிலாந்து பேட்ஸ்மேன் டேரில் மிட்செல்!

2026 உலகக் கோப்பை கால்பந்து: 42 அணிகள் தகுதி! முழு விவரங்கள்..!

இந்தியா - வங்கதேச மகளிர் கிரிக்கெட் தொடர் ஒத்திவைப்பு! ஷேக் ஹசீனா விவகாரம் காரணமா?

அவர்கள் மேல் கம்பீர் நம்பிக்கை வைக்க வேண்டும்… கங்குலி அட்வைஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments