Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

'கமிஷன், கரப்ஷன், கலக்‌ஷன், பேரம்' - இதுதவிர அதிமுக ஆட்சிக்கு வேறேதுமே தெரியாதா? ஸ்டாலின் கேள்வி

Advertiesment
'கமிஷன், கரப்ஷன், கலக்‌ஷன், பேரம்' - இதுதவிர அதிமுக ஆட்சிக்கு வேறேதுமே தெரியாதா?  ஸ்டாலின் கேள்வி
, புதன், 13 நவம்பர் 2019 (19:51 IST)
’தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் ரூ.2081 கோடி வாடகை பாக்கி வைத்துள்ளது என சிஏஜி அறிக்கை சுட்டிக்காட்டியும், அந்தப் பணத்தை வசூல் செய்யாமல், ரூ.250 கோடியாக குறைக்கும் 'பேரம்' நடப்பதாக செய்தி’ என தமிழக எதிர்கட்சித் தலைவர் மற்றும் திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது :
 
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் ரூ.2081 கோடி வாடகை பாக்கி வைத்துள்ளது என சிஏஜி அறிக்கை சுட்டிக்காட்டியும், அந்தப் பணத்தை வசூல் செய்யாமல், ரூ.250 கோடியாக குறைக்கும் 'பேரம்' நடப்பதாக செய்தி! அமைச்சரவை அப்படி முடிவு எடுத்திருந்தால், அதற்கான அரசாணை ஏதும் வெளியிடாமல் நிறுத்த வேண்டும் 
 
மேலும், மக்கள் நலத் திட்டங்களுக்கு, நிதி பற்றாக்குறை எனும் நேரத்தில், இதுபோன்ற வாடகை பாக்கியை குறைக்கும் நடவடிக்கை யார் லாபத்திற்காக?
 
கமிஷன், கரப்ஷன், கலக்‌ஷன், பேரம்' - இதுதவிர அதிமுக ஆட்சிக்கு வேறேதுமே தெரியாதா? என கேள்வி எழுப்பியுள்ளார்.
 
இதுகுறித்து அதிமுக தரப்பில் தகுந்த விளக்கமளிக்க வேண்டும்  என திமுக கட்சித் தொண்டர்கள் மற்றும் நெட்டிசன்ஸ் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கிரிக்கெட் சங்கம் ரூ.2081 கோடி வாடகை பாக்கி : ’பேரம்' நடப்பதாக செய்தி -ஸ்டாலின் ’டுவீட் ’