இந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணிகளுக்கு இடையே நேற்று சென்னையில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது
இந்த போட்டியில் நேற்று தடாஸ் வெற்றி பெற்ற மேற்கிந்தியத் தீவுகள் அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. இதனையடுத்து முதலில் களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 287 ரன்கள் எடுத்தது. ரோகித் சர்மா 36 ரன்கள் மட்டுமே எடுத்து சுமாரான தொடக்கத்தை கொடுத்தார். இருப்பினும் ஸ்ரேயாஸ் அய்யர் 70 ரன்களும், ரிஷப் பண்ட் 71 ரன்களும், கேதார் ஜாதவ் 40 ரன்களும், எடுத்ததால் ஸ்கோர் உயர்ந்தது
இந்த நிலையில் 288 என்ற இலக்கை நோக்கி விளையாடிய மேற்கிந்திய தீவுகள் அணியின் ஹோப் மட்டும் ஹெட்மையர் ஆகிய இருவரும் அபாரமாக விளையாடி இருவரும் சதம் அடித்தனர். இந்த சதங்களால் மேற்கிந்திய தீவு மிக எளிய வெற்றியைப் பெற்றது. அந்த அணி 48.5 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 291 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது
நேற்றைய போட்டியில் 139 ரன்கள் எடுத்த ஹெட்மையர் ஆட்டநாயகன் விருதை பெற்றார். இந்த நிலையில் 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் மேற்கிந்திய தீவுகள் அணி 1-0 என்ற கணக்கில் முன்னணியில் உள்ளது. நேற்றைய போட்டியில் இந்திய அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களான ரோகித் சர்மா, கேஎல் ராகுல், விராட் கோலி ஆகிய மூவரும் சொதப்பியதும், பந்துவீச்சாளர்கள் விக்கெட் எடுக்க தவறியதும் தோல்விக்கு காரணமாக கூறப்படுகிறது