Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

குமரி-சென்னை விசில்போடு எக்ஸ்பிரஸ்: 750 ரசிகர்களை அழைத்து வர சிஎஸ்கே ஏற்பாடு..!

குமரி-சென்னை விசில்போடு எக்ஸ்பிரஸ்: 750 ரசிகர்களை அழைத்து வர சிஎஸ்கே ஏற்பாடு..!
, வெள்ளி, 14 ஏப்ரல் 2023 (09:55 IST)
whistle podu
கன்னியாகுமரியில் இருந்து சென்னைக்கு 750 ரசிகர்களை அழைத்து வந்து சிஎஸ்கே போட்டியை பார்க்க சிஎஸ்கே நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. 
 
வரும் 30ஆம் தேதி சென்னை மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டி சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டியை பார்ப்பதற்கு 750 ரசிகர்களை கன்னியாகுமரியில் இருந்து சென்னை வரும் ரயிலில் அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது 
 
கன்னியாகுமாரி திருநெல்வேலி மதுரை திண்டுக்கல் திருச்சி ஆகிய பகுதிகளில் உள்ள ரசிகர்கள் இதற்காக தேர்வு செய்யப்படுவார்கள். www.chennaisuperkings.com/whistlepoduexpress/#/  என்ற இணையதளத்தில் இன்று முதல் பதிவு செய்தால் அதிர்ஷ்டசாலி ரசிகர்களுக்கு இந்த ரயிலில் பயணம் செய்ய இடம் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
விசில் போடு எக்ஸ்பிரஸ் என்று பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த ரயிலில் பயணம் செய்து சென்னை பஞ்சாப் ஓட்டியை இலவசமாக பார்க்க வேண்டும் என்றால் உடனே நீங்கள் மேற்கண்ட இணையதளத்தில் பதிவு செய்யுங்கள்.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஓவர்களுக்கு இடையில் நான் பாடல் பாடுவேன்… சச்சின் என்ன செய்வார் தெரியுமா?- சேவாக் பகிர்ந்த ருசிகர சம்பவம்!