இந்திய அணியின் முன்னாள் அதிரடி தொடக்கக் காரரான சேவாக், மனதில் பட்ட கருத்துகளை தைரியமாகக் கூறி வருபவர். கடந்த 2017 ஆம் ஆண்டு, அவர் ஓய்வு பெற்ற அவர் இப்போது கிரிக்கெட் வர்ணனை உள்ளிட்டவற்றி ஈடுபட்டுள்ளார். மிகவும் நகைச்சுவையாக பேசும் திறன்கொண்ட சேவாக், அவரது பேட்டிங்கை போலவே பேச்சுக்கும் ரசிக்கப்படுகிறார்.
இந்நிலையில் இப்போது 2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியின் போது நடந்த சுவாரஸ்யமான சம்பவங்களை பகிர்ந்து கொண்டுள்ளார். அதில் “அந்த போட்டியில் நாங்கள் சிறப்பான தொடக்கம் அமைத்தோம். 20 ஓவர்களுக்கு 140 ரன்கள் கிட்ட சேர்த்தோம். ஓவர் இடைவேளையில் சச்சின் பவுலர்களின் உத்தி, பிட்ச் தன்மை பற்றி என எதாவது பேசிக்கொண்டே இருப்பார். ஆனால் கவலையில்லாமல் கிஷோர் குமார் பாடல்களை எல்லாம் பாடுவேன். ஒரு கட்டத்தில் பொறுமையிழந்த சச்சின், நீ இப்படியே கிஷோர் குமார் பாடலைப் பாடிக்கொண்டிருந்தால் எனக்குப் பைத்தியம் பிடித்துவிடும் எனக் கூறினார்.” என ஜாலியாக தெரிவித்துள்ளார். சேவாக்கின் இந்த சம்பவமே, சச்சின் மற்றும் சேவாக்கின் பேட்டிங் மற்றும் அவரின் தனிப்பட்ட மனநிலைகளை தெளிவாக உணர்த்துகிறது. சச்சின் அனைத்தையும் மிகவும் தீவிரமாக அனுகுபவர். ஆனால் சேவாக் மிகவும் ஜாலியாக அனுகுபவர் என்பது தெரிகிறது.
அந்த போட்டியில் சச்சின் சதமடிக்க, சேவாக் 73 ரன்களில் ஆட்டமிழந்தார். அந்த உலகக்கோப்பை தொடரில் இந்தியா தோற்ற ஒரே போட்டியாக அந்த போட்டி அமைந்தது குறிப்பிடத்தக்கது.