Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலகக்கோப்பை கிரிக்கெட்: அரையிறுதிக்கு செல்லும் நான்கு அணிகள் எவை எவை?

Webdunia
புதன், 3 ஜூலை 2019 (07:17 IST)
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி தொடர் கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்திற்கு வந்துவிட்டது. ஆஸ்திரேலியா, இந்தியா ஆகிய இரண்டு அணிகளும் அரையிறுதிக்கு தகுதி பெற்றுவிட்டது. 11 புள்ளிகளுடன் உள்ள நியூசிலாந்து அணியும், 10 புள்ளிகளுடன் உள்ள இங்கிலாந்து அணியும் இன்று மோதுகின்றன. இந்த போட்டியில் வெல்லும் அணி அரையிறுதிக்கு 3வது அணியாக தகுதி பெற்றுவிடும்
 
இன்றைய போட்டியில் நியூசிலாந்து வெற்றி பெற்றால் 13 புள்ளிகளுடன் மூன்றாவது அணியாக அரையிறுதிக்கு தகுதி பெற்றுவிடும். அதன்பின்னர் பாகிஸ்தான் அணி வங்கதேசத்துடன் மோதும் போட்டியில் பாகிஸ்தான் வென்றால் அந்த அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றுவிடும். ஒருவேளை வங்கதேசத்திடம் பாகிஸ்தான் தோல்வி அடைந்தால் இங்கிலாந்து அணி அரையிறுதிக்கு தகுதி பெறும்
 
அதேபோல் இன்றைய போட்டியில் இங்கிலாந்து அணி நியூசிலாந்து அணியை வீழ்த்தினால் இங்கிலாந்து அணி 12 புள்ளிகளுடன் அரையிறுதிக்கு தகுதி பெற்றுவிடும். இதனையடுத்து வங்கதேசத்தை பாகிஸ்தான் அணி வீழ்த்தினாலும் அந்த அணியால் ரன்ரேட் அடிப்படையில் அரையிறுதிக்கு தகுதி பெறுவது கடினமே. இவ்வாறு நடந்தால் ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுவிடும்
 
மேலும் இன்றைய போட்டியில் இங்கிலாந்து தோல்வி அடைந்து அதன்பின்னர் இந்திய அணியை மிகப்பெரிய ரன் வித்தியாசத்தில் இலங்கை தோற்கடித்தால் அந்த அணி அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பை பெறும்
 
மொத்தத்தில் இன்றைய போட்டியே அரையிறுதிக்கு தகுதி பெறும் 3வது மற்றும் 4வது அணியை நிர்ணயம் செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கான்பூர் டெஸ்ட்: மழை காரணமாக இரண்டு செஷன்கள் பாதிப்பு.. இரண்டாம் நாள் ஆட்டம் கைவிடப்படுமா?

கான்பூர் டெஸ்ட்… மழையால் இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்குவதில் தாமதம்!

வீரர்களைத் தக்கவைப்பதில் இப்படி ஒரு சிக்கலா?... அணிகளுக்கு பிசிசிஐ விதிக்கும் கண்டீஷன்!

வங்கதேச ரசிகர் டைகர் ராபியை இந்திய ரசிகர்கள் தாக்கவில்லை.. காவல்துறை சார்பில் அளித்த விளக்கம்!

சி எஸ் கே அணியின் பவுலிங் பயிற்சியாளர் யார்… பரிசீலனையில் இருக்கும் மூன்று பெயர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments