Publish Date: Tue, 02 Jul 2019 (23:03 IST)
Updated Date: Tue, 02 Jul 2019 (23:05 IST)
இன்று நடைபெற்ற இந்தியா மற்றும் வங்க தேச அணிகளுக்கு இடையிலான லீக் போட்டியில் இந்திய அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது
இன்றைய போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்டுக்களை இழந்து 314 ரன்கள் எடுத்தது. ரோஹித் சர்மா 104 ரன்களும், கே.எல்.ராகுல் 77 ரன்களும் எடுத்தனர்.
இந்த நிலையில் 315 என்ற இலக்கை நோக்கி விளையாடிய வங்கதேச அணி 48 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 286 ரன்கள் மட்டுமே எடுத்ததால் இந்திய அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது
இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 6 வெற்றிகளுடன் 13 புள்ளிகள் பெற்று இரண்டாவது இடத்தை தக்க வைத்து கொண்டதோடு, அரையிறுதிக்கும் தகுதி பெற்றுள்ளது.