Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஐந்தாவது டெஸ்டில் ஆறுதல் வெற்றி பெறுமா இந்தியா?

ஐந்தாவது டெஸ்டில் ஆறுதல் வெற்றி பெறுமா இந்தியா?
, செவ்வாய், 11 செப்டம்பர் 2018 (14:15 IST)
இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று வருகிறது.ஏற்கனவே 3-1 என தொடரை இழந்து தவிக்கும் இந்திய அணி, இன்றைய ஐந்தாம் டெஸ்ட்டின் போதும் சற்று மந்தமாகவே விளையாடி வருகிறது.

முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 332, இந்திய 292 ரன்கள் எடுத்திருந்தன..மூன்றாம் நாளின் முடிவில் இரண்டாவது இன்னிங்ஸ்சில் இங்கிலாந்து அணி 114 ரன்களுக்கு 2 விக்கெட் பறிகொடுத்து 154 ரன்கள் முன்னிலையில் இருந்தது.

எனவே இங்கிலாந்து அணி ஏழு விக்கெட் இழப்பிற்கு 423 ரன்கள் எடுத்திருந்த நிலையில் நான்காம் நாள் ஆட்டத்தை டிக்ளேர் செய்தது. நான்காம் நாள் ஆட்டத்தின் போது குக் தனது 33வது சதத்தைக் கடந்து 147 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அவ்ர் பெவிலியன் திரும்பினார். இது அவரது கடைசி டெஸ்ட் போட்டியாகும்.
webdunia

இப்போட்டியில்  அபாரமாக விளையாடிய ஜோரூட்டும் சதம் அடித்து அணிக்கு பலம் சேர்த்தார். இந்திய அணியின் பவுலரான விஹாரி 3, ஷமியும்,ஜடேஜாவும் தலா 2 விக்கெட்டுகள் எடுத்திருந்தனர்.
webdunia

ஐந்தாவது டெஸ்டில் வெற்றிக்குத் தேவை 464 என்ற இலக்குடன் மைதானத்தில் களமிறங்கிய இந்திய அணிக்கு ஆரம்பத்திலேயே பலத்த இடி காத்திருந்தது. ராகுல் (46) புஜார (0)ஆண்டர்சனின் ஒரே ஓவரில் இருவரும் வீழ்ந்தனர். கோஹ்லியும் வந்த வந்த வேகத்திலேயே ட்க் அவுட்டகி நடையைக் கட்ட இந்திய அணி 2 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளைப் பறிகொடுத்து பறிதாபமாக விளையாடி வந்தது.
webdunia

நேற்றைய நான்காம் நாளின் முடிவில் இரண்டாவது இன்னிங்ஸில் ஆடிய இந்திய அணி 3 விக்கெட்டுகள் இழந்து மொத்தமாக 58 ரன்கள் எடுத்திருந்தது. இன்று கடைசி நாள் ஆகையால் 405 ரன்கள் பின்தங்கியுள்ள இந்திய அணியின் கள வீரர்களாக ராகுல் (4 ரகானே (10) ரன்கள் எடித்து விளையாடி வருகின்றனர்.

இன்றைய கடைசி நாளின் ஆட்டத்திலாவது இந்திய அணி சோபிக்குமா என்பது  நம் இந்திய வீரர்களின் ஆட்டத்தில் தான் தெரியும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

423 ரன்களுக்கு டிக்ளேர் செய்த இங்கிலாந்து; கோஹ்லி, புஜாரா டக் அவுட்