Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கம்பெனி இல்லாமல் கடைசி வரை போராடிய ஜடேஜா; தப்பிய இந்திய அணி

கம்பெனி இல்லாமல் கடைசி வரை போராடிய ஜடேஜா; தப்பிய இந்திய அணி
, ஞாயிறு, 9 செப்டம்பர் 2018 (21:51 IST)
5வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 292 ரன்கள் குவித்துள்ளது.

 
இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையேயான கடைசி மற்றும் 5வது டெஸ்ட் போட்டியில் முதல் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 332 ரன்கள் குவித்தது. பட்லர் மற்றும் பிராட் இணைந்து இங்கிலாந்து அணியை வலுவான நிலைக்கு அழைத்துச் சென்றனர்.
 
இதைத்தொடர்ந்து இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸை தொடங்கியது. 160 ரன்கள் 6 விக்கெட் இழந்து தவித்தபோது ஹனுமா விகாரி அரைசதம் விளாசி இந்திய அணிக்கு நம்பிக்கையை பெற்று தந்தார். 
 
விகாரி களத்தை விட்டு வெளியேறிய பின், ஜடேஜா அரைசதம் அடிக்கும் வரை நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 9 விக்கெட்டுகள் விழுந்த பின்னும் இந்திய அணியில் இன்னும் பேட்ஸ்மேன் இருக்கிறேன் என்று இங்கிலாந்து அணிக்கு உணர்த்தும் வகையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
 
இங்கிலாந்து அணியில் பட்லர் கடைசி நேரத்தில் அதிரடியாக ரன் குவிப்பது போல் ஜடேஜா கடைசி நேரத்தில் விரைவாக குவித்தார். இருந்தும் இந்திய அணி 300 ரன்களை கடக்கவில்லை. 292 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
 
ஜடேஜா இறுதி வரை களத்தில் இருந்தார். இதையடுத்து தற்போது இங்கிலாந்து அணி தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கலந்தாலோசிக்க மறுக்கும் விராட் கோஹ்லி; தொடர்ந்து வீணாகும் ரிவ்யூக்கள்