Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

2வது டெஸ்ட்: இந்திய பவுலர்கள் அபாரம், இன்னிங்ஸ் வெற்றிக்கு வாய்ப்பு!

2வது டெஸ்ட்: இந்திய பவுலர்கள் அபாரம், இன்னிங்ஸ் வெற்றிக்கு வாய்ப்பு!
, ஞாயிறு, 1 செப்டம்பர் 2019 (07:57 IST)
இந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி கிங்ஸ்டன் நகரில் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 416 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. விஹாரி அபாரமாக விளையாடி 111 ரன்களும், கேப்டன் விராட் கோலி 76 ரன்களும், மயங்க் அகர்வால் 55 ரன்களும், இஷாந்த் சர்மா 57 ரன்களும் எடுத்தனர்
 
இதனை அடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய மேற்கிந்தியத் தீவுகள் அணி இந்திய பந்துவீச்சாளர்களை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது நேற்றைய ஆட்ட நேர முடிவில் 33 ஓவர்களில் மேற்கிந்திய தீவுகள் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 87 ரன்கள் மட்டுமே எடுத்து உள்ளது. தற்போது கைவசம் 3 விக்கெட்டுகள் மட்டுமே உள்ள நிலையில் இன்னும் 329 ரன்கள் 329 ரன்கள் பின்தங்கியுள்ள மேற்கிந்திய தீவுகள் அணி ஃபாலோ ஆன் ஆக வாய்ப்புள்ளதாகவும், எனவே இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி கிடைக்க வாய்ப்பு இருப்பதாகவும் வர்ணனையாளர்கள் தெரிவித்துள்ளனர் 
 
நேற்றைய பந்துவீச்சில் பும்ரா மிக அபாரமாக பந்து வீசி 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. ஷமி ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். இன்றும் இந்திய பந்துவீச்சாளர்கள் அபாரமாக பந்துவீசினால் ஒருசில நிமிடங்களில் மேற்கிந்திய தீவுகளின் முதல் இன்னிங்ஸ் முடிவடைய வாய்ப்பு உள்ளது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மைதானத்தில் மயங்கி விழுந்த பிரபல கிரிக்கெட் விரர்: ரசிகர்கள் பதற்றம்