Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹோல்டருக்குத் தடை – ஐசிசி மீது வெஸ்ட் இண்டீஸ் வாரியம் பாய்ச்சல் !

Webdunia
வியாழன், 7 பிப்ரவரி 2019 (12:17 IST)
இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விளையாட விதிக்கப்பட்டுள்ள தடைக்கு எதிராக வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியத் தலைவர் டேவ் கேமருன் குரல் கொடுத்துள்ளார்.

வெஸ்ட் இண்டீஸுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு இங்கிலாந்து கிரிக்கெட் போட்டியில் விளையாடி வருகிறது. நடந்து முடிந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் வெஸ்ட் இண்டீஸ் அணி வென்று தொடரைக் கைப்பற்றியுள்ளது. சமீபகாலமாக சர்வதேசக் கிரிக்கெட் போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ் அணி வரிசையாக சொதப்பி வருகிறது. இந்தத் தொடர் வெற்றியின் மூலம் மீண்டும் தன்னை ஒரு வலுவான் அணியாகக் கட்டமைத்துக் கொண்டுள்ளது. இந்த வெற்றிக்காக வெஸ்ட் இண்டீஸ் அணியையும் கேப்டன் ஹோல்டரையும் அனைவரும் கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் 3 நாட்களுக்குள் முடிந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் மெதுவாகப் பந்துவீசி போட்டியைத் தாமதப்படுத்தியதாகக் கூறி வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஹோல்டருக்கு ஐசிசி அடுத்த டெஸ்ட் போட்டியில் விளையாடத் தடை விதித்திள்ளது. இந்தத் தடைக்கு முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் சிலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து ஹோல்டருக்கு ஆதரவாக முன்னாள் கிரிக்கெட் வீரர்களான ஷேன் வார்ன் மற்றும் மைக்கேல் வான் ஆகியோர் குரல் கொடுத்தனர். வார்ன் இது ஒரு மூளை இல்லாத செயல் என கணடனம் தெரிவித்தார். இதையடுத்து இப்போது ஹோல்டருக்கு ஆதரவுப் பெருகி வருகிறது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியத் தலைவர் டேவ் கேமரூன்  ’வெஸ்ட் இண்டீஸ் அணி  டெஸ்ட் போட்டிகளில் புத்துணர்ச்சிப் பெற்று சிறப்பாக விளையாடி வரும் ஒருத் தொடரின் பாதியில் ஐசிசி யின் இந்த முடிவு சரியானதல்ல. சிறப்பானப் பல விஷயங்களுக்காக நினைவில் கொள்ள வேண்டிய இந்த தொடர் இப்போது ஹோல்டரின் தடைக்காக நினைவில் கொள்ளப்படும் என்பது வெட்கக்கேடு.’ எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

ஐபிஎல் திருவிழா… சென்னையில் இன்று சி எஸ் கே வை எதிர்கொள்ளும் பஞ்சாப்…!

மும்பை இந்திய்ன்ஸ் கிட்ட எவ்ளோ வாங்குனீங்க? நடுவரை வறுத்தெடுத்தும் ரசிகர்கள்… எல் எஸ் ஜி வீரரின் ரன் அவுட்டில் கிளம்பிய சர்ச்சை!

டி 20 உலகக் கோப்பை தொடர்… ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவ் ஸ்மித்துக்கு வாய்ப்பில்லை!

தோல்விக்கு இதுதான் காரணம்… மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா!

ப்ளே ஆஃப் சுற்றுக்கு லீவ் லெட்டர் கொடுக்கும் இங்கிலாந்து வீரர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments