Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

'தல'தோனியை மிஸ் பண்றோம்...சாஹலின் வைரல் வீடியோ

Advertiesment
'தல'தோனியை மிஸ் பண்றோம்...சாஹலின் வைரல் வீடியோ
, செவ்வாய், 28 ஜனவரி 2020 (15:28 IST)
இந்திய அணிக்கான மூன்று சேம்பியன் கோப்பைகளையும் ( டி -20, ஒருநாள், சேம்பியன் டிராபி ) பெற்றுக் கொடுத்த ஒரே கேப்டன் என்ற சாதனைக்குச் சொந்தக் காரரான தோனிக்கு கடந்த வருடமும் இந்த வருடமும் போதாத காலம். அவர் உலகக் கோப்பை தொடருடன் அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது.
அதனால் தோனியின் ரசிகர்கள் கவலை அடைந்துள்ள சமயத்தில் அவருடைய கிரிக்கெட் அத்தியாயம் முடிவடைந்துவிட்டதாக பலரும் வதந்திகளை பரப்பினர்.அதேபோல், மேற். தீவுகளுடனான தொடரிலும் , ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரிலும், நியுசிலாந்துக்கு எதிராக தொடரிலும் அவர் இடம்பெறவில்லை.
 
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி வரும் ஐபிஎல் போட்டியின் தோனியின் செயல்பாட்டைப் பொருத்துதான் அவர் இந்திய அணியின் இடம் பிடிப்பது தெரியும் என தெரிவித்திருந்தார்.
 
இந்த நிலையில் இந்திய அணியின் இளம் பந்து வீச்சாளர் சாஹல், சக வீரர்களிடம் கேள்வி கேட்கும் ஒரு வீடியோவை, பிசிசிஐ தன்  சமூக வலைதளப் பக்கத்தில்  வெளியிட்டிருந்தது.
 
அதில், கடைசி இருக்கை காலியாக இருந்தது. அதுகுறித்து சாஹல், இந்த இருக்கை இந்திய கிரிக்கெட் அணியின் லெஜண்ட் தோனிக்கு உரியது. அவரை நாங்கள் மிஸ் செய்கிறோம். இந்த இடத்தில் யாரும் அமருவதில்லை என்று தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நான் ஜாகீர்கானுக்கு பயிற்சியாளராக செயல்பட்டேன்; அந்த ஐடியா இவருடையதுதான் ! லட்சுமனன் ருசிகரம் !