நேற்றுவரை நீ மனிதன், இன்று முதல் நீ புனிதன்: நடராஜனை வாழ்த்தும் தமிழக வீரர்!

Webdunia
புதன், 11 நவம்பர் 2020 (14:28 IST)
நேற்றுவரை நீ மனிதன், இன்று முதல் நீ புனிதன்:
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த படையப்பா படத்தில் இடம்பெற்ற ’நேற்றுவரை நீ மனிதனப்பா, இன்று முதல் நீ புனிதனப்பா’ என்ற பாடலை தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் பாடிய வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது 
 
இந்த ஆண்டின் ஐபிஎல் தொடரில் ஹீரோவாக மதிக்கப்பட்டவர் நடராஜன் என்பது அனைவரும் அறிந்ததே. அவருடைய ஒவ்வொரு யார்க்கரும் தெறிக்கும் வகையில் இருந்தது என்பதும் முக்கிய பேட்ஸ்மேன்கள் அவருடைய யார்க்கரில் அவுட் ஆனார்கள் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் நடராஜனுக்கு பல்வேறு கிரிக்கெட் வீரர்கள், அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில் தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் தனது டுவிட்டர் தளத்தில் வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில் நடராஜனை அருகில் வைத்துக்கொண்டு வாஷிங்டன் சுந்தர் படையப்பா படத்தில் இடம்பெற்ற பாடலான ’நேற்றுவரை நீ மனிதனப்பா, இன்று முதல் நீ புனிதனப்பா’ என்ற பாடலை பாடியுள்ளனர் 
 
இதைக் கேட்டு நடராஜன் மகிழ்ச்சியில் உள்ளார். ஏற்கனவே நடராஜன் தான் ஒரு ரஜினிகாந்த் ரசிகர் என்று குறிப்பிட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. வாஷிங்டன் சுந்தரின் டுவிட்டர் பக்கத்திலுள்ள இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

46 ஆண்டுகளுக்குப் பிறகு… சாதனை படைத்த நியுசிலாந்து பேட்ஸ்மேன் டேரில் மிட்செல்!

2026 உலகக் கோப்பை கால்பந்து: 42 அணிகள் தகுதி! முழு விவரங்கள்..!

இந்தியா - வங்கதேச மகளிர் கிரிக்கெட் தொடர் ஒத்திவைப்பு! ஷேக் ஹசீனா விவகாரம் காரணமா?

அவர்கள் மேல் கம்பீர் நம்பிக்கை வைக்க வேண்டும்… கங்குலி அட்வைஸ்!

கேப்டன் ஷுப்மன் கில் இரண்டாவது போட்டியில் விளையாடுவது சந்தேகம்… !

அடுத்த கட்டுரையில்
Show comments