Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வாங்க நட்டு, நாம் ஆஸ்திரேலியாவில் சந்திப்போம்: வார்னர் வாழ்த்து!

Advertiesment
வாங்க நட்டு, நாம் ஆஸ்திரேலியாவில் சந்திப்போம்: வார்னர் வாழ்த்து!
, செவ்வாய், 10 நவம்பர் 2020 (18:10 IST)
வாங்க நட்டு, நாம் ஆஸ்திரேலியாவில் சந்திப்போம்: வார்னர் வாழ்த்து!
2020 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சில முக்கிய சாதகங்கள் இந்திய அணிக்கு கிடைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக சூர்யகுமார் யாதவ் மற்றும் ருத்ராஜ் ஆகியோர்களின் அபாரமான பேட்டிங் மற்றும் நடராஜனின் அபாரமான பந்து வீச்சு வெளிப் பட்டுள்ளது. இவர்கள் மூவருமே அடுத்து இந்திய அணியில் இடம்பெற வாய்ப்பு உள்ளவர்களாக கருதப்படுகின்றனர் 
 
இந்த நிலையில் ஆஸ்திரேலியா செல்லும் இந்திய அணியில் நடராஜன் இணைந்து உள்ளார் என்பதும் மிக விரைவில்  சூர்யகுமார் யாதவ் மற்றும் ருத்ராஜ்  இந்த்ய அணியில் வாய்ப்பு கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது
 
இந்த நிலையில் ஐதராபாத் அணியின் கேப்டன் வார்னர், நடராஜனிடம், ‘நீங்கள் ஆஸ்திரேலியாவுக்கு வாருங்கள் அங்கு நாம் சந்திப்போம் என்று தெரிவித்துள்ளார். இரண்டாவது குவாலிஃபையர் போட்டியில் தீவிரமாக முயற்சி செய்தும் நூலிழையில் வெற்றியை கோட்டை விட்டு ஐதராபாத் அணியின் கேப்டன் வார்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
 
இந்த சீசன் எங்களுக்கு மிகவும் அற்புதமாக அமைந்தது. எங்கள் அணிக்கு ஆதரவு கொடுத்த அனைவருக்கும் நன்றி. ஆரம்பத்தில் நாங்கள் ஒரு சில தோல்விகளை தழுவினாலும் அதன் பிறகு தொடர் வெற்றி பெற்று குவாலிஃபையர் வரை முன்னேறினோம். இருப்பினும் இறுதி போட்டியில் விளையாடும் வாய்ப்பை இழந்தது துரதிர்ஷ்டம்தான்
 
மேலும் நடராஜனுக்கு எனது வாழ்த்துக்கள், அவரை நான் ஆஸ்திரேலியாவில் சந்திப்பேன் என்று கூறியுள்ளார்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உலகக்கோப்பை இறுதிப் போட்டிக்குப் பின் ஐபிஎல் இறுதி போட்டிதான்! பொல்லார்ட் கருத்து!