Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கப் ஜெயிச்ச மும்பை அணிக்கு கூகிள் தந்த பரிசு! – தானோசுக்கு பிறகு மும்பைக்குதான்!

Webdunia
புதன், 11 நவம்பர் 2020 (11:25 IST)
நேற்றைய ஐபிஎல் தொடரின் இறுதி போட்டியில் வெற்றி பெற்ற மும்பை அணியை வாழ்த்தும் விதமாக கூகிள் செய்துள்ள செயல் ட்ரெண்டாகி வருகிறது.

அரபு அமீரகத்தில் செப்டம்பர் முதலாக பரபரப்பாக நடந்து வந்த ஐபிஎல் தொடர் நேற்றுடன் முடிவடைந்தது. நேற்றைய இறுதி போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸும், ரோகித் சர்மாவின் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. இதில் தனது அபாரமான ஆட்டத்தால் வெற்றி பெற்று ஐபிஎல் கோப்பையை மீண்டும் கைப்பற்றியது மும்பை.

மொத்த 13 சீசன்களில் இந்த வருட போட்டியோடு மொத்தம் 5 முறை கோப்பையை வென்றுள்ளது மும்பை இந்தியன்ஸ். இரண்டாவதாக அதிகபட்சமாக 3 முறை கோப்பையை கைப்பற்றியுள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ். மும்பை இந்தியன்ஸ் அணியின் இந்த வெற்றியை உலகெங்கும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில், கூகிளும் தன் பங்கிற்கு கொண்டாடி வருகிறது.

கூகிள் தேடும் பகுதியில் மும்பை இந்தியன்ஸ், ஐபிஎல் 2020 போன்ற வார்த்தைகளை உபயோகித்து தேடினால் வானவேடிக்கைகள் வெடிப்பது போல கூகிள் மேம்பாடு செய்துள்ளது. முன்னதாக அவெஞ்சர்ஸ் படம் வெளியானபோது தானோஸ் பெயரை தேடினால் காண்ட்லெட் சொடக்கு போட்டு எழுத்துகள் மறைவது போல செய்திருந்த கூகிள், மும்பை இந்தியன்ஸுக்காக தற்போது இந்த வானவேடிக்கையை நிகழ்த்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒவ்வொரு போட்டியும் நாங்களா செதுக்குனது..! பஞ்சாப் கிங்ஸ் வெற்றி குறித்து கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர்!

இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடரை எந்த டிவியில், எந்த ஓடிடியில் பார்க்கலாம்? அதிகாரபூர்வ அறிவிப்பு..!

சச்சின் சாதனையை முறியடித்த சூர்யகுமார் யாதவ்.. குவியும் வாழ்த்துக்கள்

டெஸ்ட் போட்டிகளில் கோலியின் ‘இன்மை’யை உணர்வேன் – கேப்டன் ஷுப்மன் கில் வருத்தம்!

மும்பையை வென்று முதல் இடத்துக்கு சென்ற பஞ்சாப் கிங்ஸ்… இரண்டாம் இடம் யாருக்கு?

அடுத்த கட்டுரையில்
Show comments