Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்துக்கள் குறித்து சர்ச்சை கருத்து: மன்னிப்பு கேட்டார் வக்கார் யூனிஸ்!

Webdunia
புதன், 27 அக்டோபர் 2021 (17:03 IST)
இந்துக்கள் குறித்து சர்ச்சை கருத்து கூறிய பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வக்கார் யூனிஸ் மன்னிப்பு கேட்டு உள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
கடந்த ஞாயிறு அன்று இந்தியா பாகிஸ்தான் மோதிய உலக கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது என்பது தெரிந்ததே
 
இந்த நிலையில் இந்த போட்டி முடிந்த பின்னர் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த வக்கார் யூனிஸ், பாபர் அசாம் மற்றும் ரிஸ்வான் ஆகியோர் பேட்டிங் செய்த விதம் அருமையாக இருந்தது அதுவும் குறிப்பாக போட்டியின் நடுவே இந்துக்கள் முன்னணியில் அவர் நமாஸ் செய்தது தான் மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்று என்றும் கூறியிருந்தார் 
வக்கார் யூனிஸ் இந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும் அவரது கருத்துக்கு தங்களது கண்டனத்தை தெரிவித்தார்கள். இந்த நிலையில் இவர் தனது டுவிட்டர் பக்கத்தில் இதுகுறித்து மன்னிப்பு கேட்டுள்ளார் அவர் கூறியிருந்ததாவது
 
உற்சாக மிகுதியில் அந்த நேரத்தில் அவ்வாறு தெரிவித்துவிட்டேன். பலரின் மனங்களை காயப்படுத்திய அந்த கருத்தை நான் வேண்டுமென்றே அப்படி கூறவில்லை. அது தவறானதாகும். இதற்காக என்னை மன்னியுங்கள். விளையாட்டு மக்களை இனம், நிறம், மதம் கடந்து ஒன்றிணைக்கிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிஎஸ்கே அணியின் ஏலத்தில் வாங்கப்பட்ட வீரர்கள் மற்றும் தக்கவைக்கப்பட்ட வீரர்கள்.. முழு விவரங்கள்

அணி தேர்வில் கோலி அதிருப்தியா?... பெங்களூர் அணி இயக்குனர் சொன்ன பதில்!

சிராஜை அணியில் எடுக்க முடியாமல் போகக் காரணம் இதுதான்… தினேஷ் கார்த்திக் பதில்!

வயதை குறைத்து சொல்லி ஏமாற்றினாரா வைபவ் சூர்யவன்ஷி?... தந்தை ஆவேசம்!

ஆஸ்திரேலியா தொடருக்கு நடுவே திடீரென இந்தியா திரும்பிய கம்பீர்!

அடுத்த கட்டுரையில்
Show comments