Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பெங்களூரு அணிக்காக 200 போட்டிகள்: விராத் செய்த சாதனை

Advertiesment
பெங்களூரு அணிக்காக 200 போட்டிகள்: விராத் செய்த சாதனை
, வெள்ளி, 16 அக்டோபர் 2020 (07:12 IST)
பெங்களூரு அணிக்காக 200 போட்டிகள்: விராத் செய்த சாதனை
ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் கடந்த 13 ஆண்டுகளாக விளையாடி வரும் தோனி ஒரே அணிக்கு அதிகமுறை தலைமையேற்று விளையாடி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சாதனையை இதுவரை யாரும் முறியடிக்க முடியவில்லை 
 
ஆனால் அதே நேரத்தில் இரண்டு ஆண்டுகள் சிஎஸ்கே தடை செய்யப்பட்டபோது அவர் புனே அணிக்காக விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் ஒரே அணிக்காக 200 போட்டிகளில் விளையாடிய சாதனையை விராட் கோலி செய்துள்ளார். அவர் பெங்களூரு அணிக்காக கடந்த 13 ஆண்டுகளில் 200 போட்டிகளில் விளையாடி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
ஐபிஎல் போட்டிக்காக 185 போட்டிகளிலும் சாம்பியன் லீக் போட்டிகளில் 15 போட்டிகளிலும் பெங்களூரு அணிக்காக விராத் கோஹ்லி விளையாடியுள்ளார்
 
ஆனால் எம்.எஸ் தோனி சிஎஸ்கே அணிக்காக 191 போட்டிகளில் விளையாடியுள்ளார் என்பதும், சுரேஷ் ரெய்னா சிஎஸ்கே எனக்காக 187 போட்டிகளிலும் விளையாடி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
200  போட்டிகளில் விராட் கோஹ்லி இதுவரை பெங்களூர் அணிக்காக 6 ஆயிரத்து 92 ரன்கள் அடித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது ஒரே அணிக்காக மிக அதிக போட்டிகளில் விளையாடிய வீரர் என்ற சாதனையை பெற்றுள்ள விராட் கோலியின் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஐபிஎல்-2020; பெங்களூரை பந்தாடி பஞ்சாப் அணி வெற்றி... ’கிறிஸ் கெயில் ரன் தாண்டவம்’’...