Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விசுவாசம் ரொம்ப முக்கியம் – கோலியின் டிவிட்டால் ஏற்பட்ட குழப்பம்!

Webdunia
திங்கள், 10 ஆகஸ்ட் 2020 (10:49 IST)
இந்திய அணி மற்றும் ஆர் சி பி ஆகிய அணிகளின் கேப்டன் விராட் கோலி சமீபத்தில் பகிர்ந்த டிவீட் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய அணிக்கு கேப்டனாக இருந்து பல சாதனைகளை படைத்து வரும் விராட் கோலிக்கு ஐபிஎல் தொடரில் கோப்பையை வெல்ல முடியவில்லை என்பது மிகப்பெரிய குறையாக இருந்து வருகிறது. பல முறை இறுதிப்போட்டி வரை வந்தும் அந்த அணியால் கோப்பையை வெல்ல முடியவில்லை.

இந்நிலையில் இந்த ஆண்டு அமீரகத்தில் நடக்க இருக்கும் ஐபிஎல் தொடரை ஆர் சி பி மற்றும் கோலி ரசிகர்கள் மிகவும் ஆவலாக எதிர்பார்த்துக் காத்துக்கொண்டு இருக்கின்றனர். இதையடுத்து நேற்று கோலி தன் டிவிட்டர் பக்கத்தில் ‘எல்லாவற்றையும் விட விசுவாசம் மிகவும் முக்கியம். ஐபிஎல் தொடரில் விளையாட மிகவும் ஆர்வமாக உள்ளேன்’ என்று பகிர்ந்திருந்தார்.

இதில் விஸ்வாசம் மிகவும் முக்கியம் எனக் கூறியது ஏன் என பலரும் குழம்பியுள்ளனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

IPL-ஆ.. PSL.. ஆ? இரண்டில் எது சிறந்தது… இங்கிலாந்து வீரரின் வாயைக் கிளறிய பாக் ஊடகம்..!

ஒலிம்பிக்ஸ் 2028: கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும் மைதானங்கள் அறிவிப்பு!

தொடர் தோல்வியில் ராஜஸ்தான்.. வெற்றிப்படிக்கட்டில் டெல்லி! - DC vs RR போட்டி எப்படி இருக்கும்?

இந்த வெற்றியை நம்பவே முடியவில்லை… ஆனால் துள்ளிக் குதிக்க மாட்டோம்- பஞ்சாப் கேப்டன் ஸ்ரேயாஸ்!

PSL தொடரில் ஆட்டநாயகன் விருது பெற்றவருக்கு பரிசளிக்கப்பட்ட Hair dryer.. இணையத்தில் ட்ரோல்!

அடுத்த கட்டுரையில்
Show comments