Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விரைவில் கோலி ஒருநாள் கிரிக்கெட் கேப்டன்ஷிப்பை துறப்பார்? ரவிசாஸ்திரி சொன்ன ஷாக்கிங் நியூஸ்!

விரைவில் கோலி ஒருநாள் கிரிக்கெட் கேப்டன்ஷிப்பை துறப்பார்? ரவிசாஸ்திரி சொன்ன ஷாக்கிங் நியூஸ்!
, சனி, 13 நவம்பர் 2021 (17:10 IST)
இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி விரைவில் ஒருநாள் போட்டிகளுக்கான கேப்டன்ஷிப்பையும் துறக்கலாம் என முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.

உலகக் கோப்பையில் அரையிறுதிக்கு தகுதி பெறாத இந்திய அணி கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது. ரசிகர்களிடம் மட்டும் இல்லாமல் முன்னாள் வீரர்களே விமர்சனங்களை வைக்க ஆரம்பித்துள்ளனர். தொடருக்கு முன்னதாகவே விராட் கோலி கேப்டன் பொறுப்பை விட்டு விலகுவதாக அறிவித்திருந்தார். இதையடுத்து இப்போது நியுசிலாந்து தொடருக்கு கேப்டனாக ரோஹித் ஷர்மா நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் முன்னாள் பயிற்சியாளரான ரவி சாஸ்திரி கேப்டன் கோலி ஒருநாள் போட்டிகளுக்கான கேப்டன்ஷிப்பில் இருந்தும் விலகலாம் என கூறியுள்ளார். அவர் அளித்த நேர்காணலில் ‘ கோலி தலைமையில் இந்திய டெஸ்ட் அணி கடந்த 5 ஆண்டுகளில் இந்தியா நம்பர் ஒன் அணியாக இருந்தது. கோலி எதிர்காலத்தில் டெஸ்ட் கேப்டன்ஷிப் மற்றும் தனது பேட்டிங் ஆகியவற்றில் மட்டும் கவனம் செலுத்தலாம். அதனால் அவர் ஒருநாள் போட்டிகளுக்கான கேப்டன்ஷிப்பில் இருந்து விலகலாம். இது உடனே நடக்கும் என நான் சொல்லமாட்டேன். தனது மனது மற்றும் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு இந்த முடிவை எடுக்கலாம்.’ எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளிலும் கேப்டன் பொறுப்பை கோலி துறக்க வேண்டும்… பாக் முன்னாள் வீரர் கருத்து!