Webdunia - Bharat's app for daily news and videos

Install App

3 நாடுகளில் வெற்றி வாகை சூடிய முதல் ஆசிய கேப்டன் விராட் கோலி!

Webdunia
செவ்வாய், 11 டிசம்பர் 2018 (11:03 IST)
தென்ஆப்பிரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா மண்ணில் ஒரே ஆண்டில் வெற்றியை ருசித்த ஒரே ஆசிய கேப்டன் என்ற சாதனையை விராட் கோலி படைத்துள்ளார். 


 
ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்ட் அடிலெய்டில் நடைபெற்றது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணியுடன் இணைந்து விராட் கோலி பல்வேறு சாதனைகள் படைத்துள்ளார். இந்திய அணி இதுவரை ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடும்போது முதல் போட்டியில் வெற்றி பெற்றது கிடையாது. முதன்முறையாக விராட் கோலி தலைமையில் தற்போது வெற்றி வாகை சூடியுள்ளது.
 
ஆசிய அணிகளான இந்தியா, பாகிஸ்தான், இலங்கை மற்றும் வங்காள தேச அணிகள் தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா என மூன்று நாடுகளிலும் ஒரே ஆண்டில் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றது கிடையாது.
 
தற்போதைய விராட் கோலி தலைமையிலான இந்திய அணி தென்னாப்பிரிக்கா (ஜோகன்னஸ்பர்க்), இங்கிலாந்து (ஹெட்டிங்லே), ஆஸ்திரேலியா (அடிலெய்டு) வெற்றி பெற்றுள்ளது.
 
இதன் மூலம் ஒரே ஆண்டில் மூன்று நாடுகளிலும் வெற்றியை ருசித்த ஒரே ஆசிய கேப்டன் என்ற சாதனையைப் படைத்துள்ளார். மேலும் முதல் இந்திய கேப்டன் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

The Greatest of all time! T20 போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த ஒரே இந்திய வீரர்! மாஸ் காட்டிய King Kohli!

MI vs RCB! ஆத்தி.. என்னா அடி! Power Play-ல் பொளந்து கட்டிய கோலி-படிக்கல்!

உலக குத்துச்சண்டை கோப்பை.. இந்திய வீரர் தங்கம் வென்று சாதனை..!

போட்டிக் கட்டணத்தில் 25 சதவீதம் அபராதம்.. என்ன தவறு செய்தார் இஷாந்த் ஷர்மா!

டி 20 என்றாலே பேட்ஸ்மேன்களைப் பற்றிதான் பேசுகிறார்கள்… ஆனால்?- ஷுப்மன் கில் கருத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments